NATIONAL

புக்கிட் மெலாவத்தி தொகுதியில் தீபன்-நோராஸ்லி இடையே நேரடிப் போட்டி

கோலாலம்பூர், ஜூலை 29: புக்கிட் மெலாவத்தி தொகுதியில் பக்த்தான் ஹராப்பான் வேட்பாளர் தீபன் சுப்பிரமணியம் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் நோரஸ்லி
யாஹ்யா இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

இன்று காலை கோல சிலாங்கூர் உள்ளரங்கில் நடைபெற்ற
வேட்புமனுத்தாக்கலுக்குப் பின்னர் தேர்தல் அதிகாரி வேட்பாளர்களின்
பெயர்களை வெளியிட்டார்.

கோல சிலாங்கூர் தொகுதி கெஅடிலான் தலைவருமான தீபன் முதன்
முறையாக இத்தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த பொதுத் தேர்தலில்
பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளரான ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி
இத்தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.


Pengarang :