NATIONAL

சபா சுங்கத் துறையின் அதிரடிச் சோதனையில் வெ.33.6 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

கோத்தா கினபாலு, ஜூலை 31- செபங்கார் துறைமுகம் வழியாக 33
லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 101.95 கிலோ ஷாபு போதைப்
பொருளை கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை அரச மலேசிய
சுங்கத் துறை முறியடித்துள்ளது.

விசாரணை மற்றும் உளவுத் தகவல்களின் அடிப்படையில் கோலக்
கிள்ளான் துறைமுகத்திலிருந்து வந்த கொள்கலன் ஒன்றின் மீது கடந்த
புதன்கிழமை மாலை 5.00 மணியளவில் சுங்கத் துறையின் போதைப்
பொருள் தடுப்பு பிரிவு,, அமலாக்கப் பிரிவு மற்றும் அதிரடிச் நடவடிக்கைப்
பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட நடத்திய சோதனையில் இந்த போதைப்
பொருள் கைப்பற்றப்பட்டது-

பல்வேறு பொருள்கள் அடங்கிய அந்த கொள்கலனை அதிகாரிகள்
சோதனையிட்ட போது சந்தேகத்திற்குரிய ஒன்பது பெட்டிகள் மீது
விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த பெட்டிகளில் போதைப்
இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது என்று சுங்கத் துறையின் தலைமை
இயக்குநர் டத்தோ சஸூலி ஜோஹான் கூறினார்.

அந்த போதைப் பொருள் சலவைத் தூள் போல் பொட்டலமிடப்பட்டு
பல்வேறு பிரசித்தி பெற்ற சலவைத் தூள் பொட்டலங்களுடன் கலந்து
வைக்கப்பட்டிருந்ததாக நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர்
கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

இந்த போதைப் பொருள் பறிமுதல் தொடர்பில் இதுவரை யாரும் கைது
செய்யப்படவில்லை. எனினும், இந்த போதைப் பொருளை அனுப்பிய
தரப்பினர் மற்றும் பெறுநரை அடையாளம் காணும் முயற்சியில் நாங்கள்
ஈடுபட்டு வருகிறோம் என அவர் சொன்னார்.

சலவைத் தூள் வடிவில் போதைப் பொருளை கொள்கலன்களில் கடத்தும்
பணியை போதைப் பொருள் கடத்தல்காரர்கள் அண்மைய காலமாக
கடைபிடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள்
சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும்
அவர் கூறினார்.


Pengarang :