SELANGOR

வேட்பாளரை அறிவோம்- டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் (செந்தோசா தொகுதி)

ஷா ஆலம், ஜூலை 31- சிலாங்கூர் மாநிலத்தில் அதிக இந்திய
வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளில் ஒன்றாக விளங்கும் செந்தோசா
தொகுதியில் இரண்டாம் முறையாக களம் காணும் வேட்பாளராக
திகழ்கிறார் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்.

பேராக் மாநிலத்தின் ஈப்போவில் பிறந்தவரான 59 வயது குணராஜ்,
செந்தூல் லாசாலே பள்ளியில் கடந்த 1981ஆம் ஆண்டில்
இடைநிலைப்பள்ளியை முடித்தார். மலேசிய காப்புறுதிக் கழகத்தின்
சான்றிதழ் பெற்ற ஆயுள் காப்புறுதி முகவராகவும் நம்லிஃபா எனப்படும்
மலேசியக் காப்புறுத் மற்றும் நிதி ஆலோசகர்கள் சங்கத்தின்
உறுப்பினராகவும் கடந்த 2013ஆம் ஆண்டு இடம் பெற்றார்.

இது தவிர கடந்த 2015ஆம் ஆண்டு ஆசியா இ பல்கலைக்கழகத்தில்
(ஏ.இ.யு.) வர்த்தக நிர்வாகம் (எம்.பி.ஏ.), நிர்வாக மேலாண்மைத் துறையில்
பட்டம் பெற்தோடு 2018ஆம் ஆண்டில் ஸ்கேண்டிநேவியா அனைத்துலக
வர்த்தகப் பள்ளியில் வர்த்தக மேலாண்மை துறையில் (டி.பி.ஏ,) முனைவர்
பட்டமும் பெற்றார். தற்போது இவர் எம்.சி.ஐ.எஸ். காப்புறுதி கூட்டுறவுக்
கழகத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

கட்சி அரசியலைப் பொறுத்த வரை கோத்தா ராஜா தொகுதியின்
கெஅடிலான் தலைவர், சிலாங்கூர் மாநில கெஅடிலான் தலைமைத்துவ
மன்ற உறுப்பினர் கெஅடிலான் கட்சியின் தேசியத் தலைமைத்துவ மன்ற
உறுப்பினர் ஆகிய பதவிகளையும் ஏற்று அவர் திறம்பட சேவையாற்றி
வருகிறார்.

கடந்த 2009 முதல் 2016 வரை செலாயாங் நகராண்மைக் கழக
உறுப்பினராக பணியாற்றிய குணராஜ், கடந்த 2018ஆம் ஆண்டில்
செந்தோசா சட்டமன்றத் தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான்
வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

இது தவிர இந்திய சமூகத்திற்கான மந்திரி புசாரின் சிறப்பு
அதிகாரியாகவும் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இவர் பொறுப்பு வகித்து
வருகிறார்.


Pengarang :