NATIONAL

செப்டம்பரில் இணைய சேவைக் கட்டணம் குறையும்-அமைச்சர் ஃபாஹ்மி தகவல்

புத்ராஜெயா, ஜூலை 31- இணைய அடைவு நிலைக்கான கட்டாய தர
நிர்ணயம் முறை (எம்.எஸ்.ஏ.பி.) அமல்படுத்தப்பட்டப் பின்னர் எதிர்வரும்
செப்டம்பர் மாதவாக்கில் இணையச் சேவைக் கட்டணம் குறையும் என்று
தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாஹ்மி பாட்சில் கூறினார்.

எம்.எஸ்.ஏ.பி. பயன்பாட்டின் வாயிலாக மொத்த இணைய விலை
குறைக்கப்பட்டு அதன் கட்டணமும் குறைக்கப்படும் என்று தொடர்பு
மற்றும் இலக்கவியல் அமைச்சின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில்
உரையாற்றும் போது அவர் தெரிவித்தார்.

கடவுள் அருளால் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இணைய விலை குறையும்.
முன்பு குறைவாக இருந்தது. இது அதை விட குறைவாக இருக்கும் என
அவர் சொன்னார்.

சேவை வழங்குநர்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டப் பின்னரே
எம்.எஸ்.ஏ.பி. அடிப்படையில் அகண்ட அலைவரிசை சேவைக்கான
சில்லறை விலை குறைக்க முடியும் என்று தொடர்பு மற்றும் பல்லுடக
ஆணையம் கடந்த ஜூலை மாதம் கூறியிருந்தது.

குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர், மூத்த குடிமக்கள் .ஒய்வு
பெற்ற இராணுவ வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டத்
தரப்பினருக்கு உதவும் நோக்கில் ஒற்றுமை அகண்ட அலை வரிசைத்
தொகுப்பை அரசாங்கம் கடந்த பிப்ரவரி மாதம் தொடக்கியது.


Pengarang :