NATIONAL

21 வயதுக்கு மேற்பட்டோருக்கு RM100 மின்-பணம் வழங்கும் திட்டம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 1: B40 மற்றும் M40 குழுவைச் சேர்ந்த 21 வயதுக்கு மேற்பட்டோருக்கு RM100 மின்-பணம் வழங்கும் திட்டம் இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் செயல்படுத்தப்படும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த உதவிகள் அமைச்சகம் மற்றும் பங்குதாரர்களால் கண்காணிக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“இந்த மின்-பண உதவி 10 மில்லியனுக்கும் அதிகமான பெறுநர்களுக்குப் பயனளிக்கும்” என நிதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ முகநூலில் பதிவேற்றப்பட்ட அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டது.

RM100,000 மற்றும் அதற்கும் குறைவான ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு இந்த உதவி, RM1 பில்லியன் ஒதுக்கீட்டை உள்ளடக்கியது.

கடந்த ஜூலை 27 அன்று மடாணி பொருளாதாரத்தில் பயணிக்க ” மக்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தைத் தொடங்கும் போது பிரதமரால் அறிவிக்கப் பட்டது.

– பெர்னாமா


Pengarang :