NATIONAL

கவசவாகனமுடன் கார் மோதி பெண் மற்றும் மூன்று சிறுவர்கள் காயமடைந்தனர்

ஜொகூர் பாரு, ஆகஸ்ட் 10: நேற்று புங்கை, கோத்தா திங்கி சாலையில், மலேசிய ஆயுதப் படைக்கு (ஏடிஎம்) சொந்தமான கவசவாகனம் ஒன்றுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் மற்றும் மூன்று சிறுவர்கள் காயமடைந்தனர். .

இச்சம்பவம் தொடர்பில் இரவு 8.28 மணி அளவில் தனது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து, சுங்கை ரெங்கிட் பிபிபியைச் சேர்ந்த மொத்தம் 15 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகப் புங்கை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (பிபிபி) அதிகாரி டெடி போர்ஹான் உமாலி தெரிவித்தார்.

54 வயதான பெண் மற்றும் ஏழு, ஐந்து மற்றும் நான்கு வயதுடைய மூன்று சிறுவர்கள் ஹோண்டா ஒடிஸி பல்நோக்கு வாகனத்தில் (எம்பி) பயணம் செய்ததாக அவர் கூறினார்.

தெலுக் சிப்பாங் முகாமிற்குத் திரும்பிக் கொண்டிருந்த வாகனம்,  எம்பிவி வாகனத்தின் மீது மோதியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

“எனினும், சம்பந்தப்பட்ட பெண் மற்றும் மூன்று குழந்தைகளும் அவர்களின் வாகனத்தில் சிக்கிகொள்ளவில்லை,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கோத்தா திங்கி மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் காயமடைந்த அனைவருக்கும் தனது தரப்பு முதலுதவி அளித்ததாக அவர் கூறினார்.

கெபல் காரில் இருந்த இரண்டு உறுப்பினர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அவர் விளக்கினார்.

– பெர்னாமா


Pengarang :