NATIONAL

நான்கு திருட்டு வழக்குகள் வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டன

கோலாலம்பூர், ஆகஸ்ட் 10: பெட்டாலிங் ஜெயாவைச் சுற்றி நிகழ்ந்த நான்கு திருட்டு வழக்குகள் வெற்றிகரமாகத் தீர்த்துவிட்டதாக காவல்துறை நம்புகிறது. இதில் ரிங்கிட் 24,800 நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் கடந்த ஆகஸ்ட் 1 அன்று கைது செய்யப் பட்டனர்.

சுங்கை பூலோ டோல் பிளாசாவில் பிற்பகல் 2 மணியளவில் 29 முதல் 43 வயதுக்குட்பட்ட அனைவரும் கைது செய்யப் பட்டதாகப் பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் ஃபக்ருடின் அப்துல் ஹமீட் தெரிவித்தார்.

அவர்களிடமிருந்து ஒரு சங்கிலி, ஒரு கோச் கைப்பை, கால்வின் க்ளீன் வாசனை திரவிய பாட்டில் மற்றும் கருப்பு காஸ்டன் அடங்கிய ஒரு பெட்டியைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

“இரண்டு அடமானக் கடிதங்கள், ஒரு ஸ்க்ரூடிரைவர், ஒரு செட் ஆலன் சாவிகள் மற்றும் மூன்று மாற்றியமைக்கப்பட்ட ஆலன் சாவிகளும் பறிமுதல் செய்யப் பட்டன,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 30 ஆம் திகதி மதியம் 12.28 மணியளவில் டமன்சரா டமாய், பெட்டாலிங் ஜெயாவில் நிகழ்ந்த திருட்டு சம்பவம் தொடர்பான புகார் காவல்துறையினருக்குக் கிடைத்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப் பட்டதாக அவர் கூறினார்.

அனைத்து சந்தேக நபர்களும் கடந்தகாலக் குற்றவியல் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் பற்றிய பதிவைக் கொண்டிருப்பதைக் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் விசாரணைக்காக அனைத்து சந்தேக நபர்களும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :