SELANGOR

இளைஞர்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்ற அழைப்பு

ஷா ஆலம், ஆகஸ்ட் 12: சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) வாக்களிப்பதன் மூலம் இளைஞர்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றி, மாநிலத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும் தகுதியான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கவும் அழைக்கப்படுகின்றனர்.

56 தொகுதிகளை உள்ளடக்கிய சிலாங்கூர், பினாங்கு (40), நெகிரி செம்பிலான் (36), கெடா (36), கிளந்தான் (45) மற்றும் திரங்கானு (32) ஆகிய ஆறு மாநிலங்களுக்கு இன்று வாக்களிக்கும் நாளாக தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.

வாக்காளர் நேர்காணல்:

“இந்த மாநிலத் தேர்தலில் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட முடிந்தது அதிர்ஷ்டமாக உணர்கிறேன்.

“இளைஞர்களின் குரல் மிகவும் முக்கியமானது என்று நான் நம்புகிறேன். எனவே இந்த உரிமையையும் பொறுப்பையும் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க பயன்படுத்துவது சிறந்தது, ஏனெனில் உங்கள் வாக்குகள் மாநிலத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது.” என்று தனியார் துறை ஊழியரான கோ சியூ ஜீ கூறினார் (22) – காஜாங் தொகுதி

“மாநிலத்தில் மாற்றத்தை கொண்டு வர உண்மையான தகுதியுள்ள ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுக்க மக்களுக்கு உரிமை உள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வேட்பாளர்களை கண்டறிந்து, மக்களை நிர்வகிக்கும் திறமையின் அடிப்படையில் வாக்களிக்க மறக்காதீர்கள்.

“சிலாங்கூரில் உள்ள இளைஞர்கள் தங்களுக்குரிய பொறுப்புகளை நிறைவேற்ற முடியும் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் நாம் இல்லையென்றால் வேறு யார் செய்வார்கள். தேர்வு உங்களுடையது.” என்று ஷரிவா ஷாஹிடா சையத் ஓத்மான் (28) தெரிவித்தார். – பலகோங் தொகுதி

“நான் செகு அமிடிக்கு முழு ஆதரவைத் தருகிறேன், வேட்பாளர் எண் 2க்கு வாக்களிப்பேன்.

“அனைவரும் குறிப்பாக இளம் வாக்காளர்கள், சிலாங்கூர் மாநிலத்தின் குடிமக்கள் என்ற முறையில் தங்களின் கடமையை நிறைவேற்ற ஒட்டுமொத்தமாக இறங்குவோம். புத்திசாலித்தனமாக வாக்களியுங்கள்.” என்று அரிமுத்து சுப்பிரமணியம் (63) கூறினார். – ஈஜோக் தொகுதி


Pengarang :