NATIONAL

பினாங்கு முதலமைச்சராகச் சௌ கூன் இயோ பதவியேற்றார்

ஜோர்ஜ் டவுன், ஆக 13- பினாங்கு மாநிலப் பக்கத்தான் ஹராப்பான்
தலைவர் சௌ கூன் இயோ இரண்டாம் தவணைக்குப் பினாங்கு மாநில
முதலமைச்சராக இன்று இங்குள்ள ஸ்ரீ முத்தியாராவில் பதவி பிரமாணம்
எடுத்துக் கொண்டார்.

பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினரான 65 வயது சௌ, பினாங்கு
மாநில ஆளுநர் துன் அகமது புஸி அப்துல் ரசாக் முன்னிலையில் காலை
9.35 மணிக்குப் பதவியேற்றார்.

இந்த நிகழ்வில் பினாங்கு மாநிலச் செயலாளர் டத்தோ முகமது சயுத்தி
பாக்கார் மற்றும் மாநில பக்கத்தான் ஹராப்பான், பாரிசான் நேஷனல்
தலைவர்களும் கலந்து கொண்டனர்.

பினாங்கு மாநிலத்திலுள்ள 40 தொகுதிகளில் 29 தொகுதிகளைப் பக்கத்தான்
ஹராப்பான்-பாரிசான் நேஷனல் கூட்டணி வென்றதைத் தொடர்ந்து
பினாங்கு மாநில அரசுக்குச் சௌ தலைமையேற்கவுள்ளார்.

பாடாங் கோத்தா தொகுதியில் 7,116 வாக்குகள் பெரும்பான்மையில் சௌ
வென்றார். அவருக்கு 8,261 வாக்குகளும் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில்
போட்டியிட்ட ஹிங் கூன் லெங்கிற்கு 1,145 வாக்குகளும் கிடைத்தன.


Pengarang :