NATIONAL

நெகிரி செம்பிலான் மந்திரி புசார் நியமனம் குறித்து விமர்சனமா? பேராக் மந்திரி புசார் மறுப்பு

ஈப்போ, ஆக 15- நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கு பாரிசான் நேஷனலைச்
சேர்ந்த ஒருவர் தலைமையேற்கத் தவறினால் தாம் முக்கிய முடிவினை
எடுக்கக் கூடும் என எச்சரிக்கும் வகையிலான அறிக்கையை தாம்
வெளியிட்டதாகக் கூறப்படுவதை பேராக் மந்திரி புசார் டத்தோஸ்ரீ சாரானி
முகமது மறுத்துள்ளார்.

இத்தகைய போலியான அறிக்கை சமூக ஊடகங்களில் உலா வருவது
குறித்து எனக்கு தெரிவிக்கப்பட்டது. நான் அத்தகைய அறிக்கையை
வெளியிடவேயில்லை. எனது அறிவுரை என்னவென்றால் வெறுப்புணர்வு
மற்றும் அவதூறு பரப்புவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்பதுதான் என
சாரானி சொன்னார்.

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் முடிவுக்கு வந்து விட்டன.
மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். மக்களுக்காகப் பணி
செய்யும் தருணம் இது என அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

இந்த ஒற்றுமை, நீதியினால் ஆதரிக்கப்படுவதாக இருக்க வேண்டும்.
நெகிரி செம்பிலானில் தேசிய முன்னணி பெரும்பாலான இடங்களை
வென்றுள்ளது எனும் வாசகம் அடங்கிய பிரசுரம் ஒன்று சமூக
ஊடகங்களில் பரவி வருகிறது.

இதனிடையே, நெகிரி செம்பிலான் மந்திரி புசாராக ஹராப்பான்
கூட்டணியைச் சேர்ந்த டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நியமிக்கப்பட்டது
குறித்து தாம் கேள்வியெழுப்பியதாகக் கூறப்படுதைப் பகாங் மந்திரி புசார்
டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயிலும் மறுத்துள்ளார்.

தனது நற்பெயருக்குக் களங்கத்தையும் ஹராப்பான்- பாரிசான் கூட்டணியின்
ஒற்றுமைக்குப் பாதிப்பையும் ஏற்படுத்தும் நோக்கில் இத்தகைய வதந்திகள்
பரப்பப்படுகின்றன என்று அவர் சொன்னர்.


Pengarang :