NATIONAL

மலேசிய விமானத்தில் களேபரம் புரிந்த பயணி மீது ஆஸி. நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டு

சிட்னி, ஆக 15- ஆஸ்திரேலியாவில்
இருந்து மலேசியா சென்ற சர்வதேச
விமானத்தில் பெரும் களேபரத்தை
ஏற்படுத்திய 45 வயது நபர் மீது இன்று
நீதிமன்றத்தில் குற்றம்
சாட்டப்படபடவுள்ளது.

விமானத்தைச் சேதப்படுத்தப் போவதாக
அச்சுறுத்தியது மற்றும் விமானப் பணியாளர் குழுவின்
பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு
இணங்கத் தவறியது ஆகிய
குற்றச்சாட்டுகளைக் கான்பெராவைச்
சேர்த்த அந்நபர் எதிர் நோக்குவதாக
ஆஸ்திரேலிய கூட்டரசு காவல் துறையின்
அறிக்கையை மேற்கோள் காட்டி
ஷின்ஹூவா நிறுவனம் செய்தி
வெளியிட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு
குற்றச்சாட்டிற்கும் அதிகபட்சமாக 10
ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 15,000
ஆஸ்திரேலிய டாலர்களுக்கு மேல் (சுமார்
9,727 அமெரிக்க டாலர்கள்) அபராதமும்
விதிக்கப்படலாம்.

அந்த நபர் இன்று டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்
திங்கள்கிழமை உள்ளூர் நேரப்படி
பிற்பகல் 1.00 மணிக்குச் சிட்னியில்
இருந்து கோலாலம்பூருக்குப் புறப்பட்டது,
ஆனால் பிற்பகல் 3.45 மணிக்கு  அந்த
விமானம் சிட்னி சர்வதேச விமான
நிலையத்திற்கு மீண்டும் திரும்ப
வேண்டி வந்தது.

விமானப் பயணத்தின் போது ​​​ பயணி
ஒருவர் தாம் வெடி பொருளை
வைத்திருப்பதாகக் கூறி களேபரத்தில்
ஈடுபட்டதைத் தொடர்ந்து அந்த நபரை
ஆஸி. போலீசார் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் கைது
செய்தனர்.


Pengarang :