SELANGOR

தேர்தல் முடிவை எதிர்த்து மனுத்தாக்கல் செய்ய நான்கு வேட்பாளர்கள் முடிவு

ஷா ஆலம், ஆக 16- இம்மாதம் 12ஆம் தேதி
நடைபெற்ற தேர்தலின் முடிவுகளை எதிர்த்து
சிலாங்கூர் மாநிலப் பக்காத்தான் ஹராப்பான்
மற்றும் பாரிசான் நேஷனல் வேட்பாளர்கள்
நால்வர் மனுத் தாக்கல் செய்யவுள்ளனர்.

தாமான் மேடான் வேட்பாளர் அகமது
அக்ஹிர் பவான் சிக், சுங்கை காண்டிஸ்
வேட்பாளர் முகமது ஜவாவி அகமது முக்னி,
டெங்கில் வேட்பாளர் நூராஸ்லி சைட்
மற்றும் கோம்பாக் செத்தியா வேட்பாளர்
டத்தோ மெகாட் ஜூல்கர்னைன் உமர்டின்
ஆகியோரே அந்த நால்வர் ஆவர்.

அந்த நான்கு வேட்பாளர்களும் 500க்கும்
குறைவான வாக்குகளில் வெற்றி
வாய்ப்பினை இழந்தனர். தாமான் மேடான்
வேட்பாளர் 30 வாக்குகள் வித்தியாசத்திலும்,
கோம்பாக் செத்தியா 58 வாக்குகள்
வேறுபாட்டிலும் சுங்கை காண்டிஸ்
வேட்பாளர்167 வாக்குகளிலும் டெங்கில்
வேட்பாளர் 407 வாக்குகள்
பெரும்பான்மையிலும் தோல்வியைத்
தழுவினர்.

விண்ணப்பம் அல்லது மேல்முறையீட்டுக்
கடிதம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு
வழக்கறிஞரிடம் ஒப்படைப்பதற்கு
தேவையான ஆவணங்களைத் தாங்கள்
சேகரித்து வருவதாக அகமது அக்ஹிரைத்
தொடர்புகொண்டபோது கூறினார்.

இரண்டு வாரங்களுக்குள் ஆட்சேபனை
மனுவைத் தாக்கல் செய்வோம் என்று
பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர்
டாக்டர் அபிஃப் பஹார்டினிடம்
தோல்வியடைந்த அக்ஹிர் தெரிவித்தார்.

மற்ற இரண்டு பாரிசான் நேஷனல்
வேட்பாளர்களான மெகட் சஃஜூல்கர்னைன்
மற்றும் நோராஸ்லி ஆகியோரும்
நீதிமன்றத்தில் சமர்பிப்பதற்குத் தேவையான
ஆதாரங்களைத் தாங்கள் சேகரித்து
வருவதாகக் குறிப்பிட்டனர்.


Pengarang :