SELANGOR

பண்டமாரான், போர்ட் கிள்ளானை சுற்றுலா மையமாக மாற்றுவதில் டோனி லியோங் தீவிரம்

ஷா ஆலம், ஆக 16- பாண்டமாரன் மற்றும்
போர்ட் கிள்ளான் நகர்களை பிரபல உணவு
அங்காடி தெருக்களாக மாற்றுவதற்கு இந்தத்
தவணையில் தாம் தொடர்ந்து
போராடவுள்ளதாகப் பண்டமாரான் தொகுதி
உறுப்பினர் டொனி லியோங் டக் சீ
உறுதியளித்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த
விஷயத்திற்காக தாம் போராடி வருவதாகவும்
ஆனால் சம்பந்தப்பட்ட நகர சாலைகள்
பொதுப்பணித் துறையின் (ஜே.கே.ஆர்.) கீழ்

இருப்பதால் இத்திட்டத்திற்கு ஊராட்சி மன்ற
அதிகாரிகள் ஒப்புக் கொள்ளவில்லை என்றும்
அவர் சொன்னார்.

கடந்த 15 ஆண்டுகளாக துாய்மை
பிரச்னையை எதிர்நோக்கியுள்ள இந்நகரை
சுற்றுலா பயணிகளின் வருகைக்கு ஏற்ற
வகையில் அழகுபடுத்த வேண்டியதன்
அவசியத்தை தாம் வலியுறுத்தி வந்துள்ளதாக
அவர் குறிப்பிட்டார்.

ஆகவே, இந்நகரத்தை மேம்படுத்துவதற்கு
ஏதுவாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள்
நகரத்தில் உள்ள சாலைகள் கிள்ளான்
நகராண்மைக்கழகத்தின் கட்டுப்பாட்டிற்குள்
திரும்புவதை உறுதிசெய்ய முயற்சிப்பேன்
என்றார் அவர்.

எழுபதாம் ஆண்டுகளில் இருந்து பந்திங்
மற்றும் போர்ட் கிள்ளானை இணைக்கும்
பிரதான சாலையாக பொதுப்பணி
இலாகாவின் கீழ் இருந்தது. ஆனால்
இப்போது அது பிரதான பாதையாக
அல்லாமல் கம்போங் பாரு பகுதியாக
மாறிவிட்டது என்று அவர் தொடர்பு
கொண்டபோது கூறினார்.

மேலும், மலேசிய சுற்றுலா மன்றத்துடன்
இணைந்து பண்டமாரானில் சுற்றுலாத்
துறையை வலுப்படுத்த தாம்
விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பண்டமாரானைச் சுற்றி கிள்ளான் லிட்டில்
இந்தியா, ஜிஎம் கிள்ளான் ஷாப்பிங் சென்டர்
மற்றும் பூலாவ் கித்தாம் ஆகிய சுற்றுலா
மையங்களோடு கடல் உணவுகள் சார்ந்த
உணவு மையங்களும் அதிகம் இருப்பதாக டோனி தெரிவித்தார்.


Pengarang :