NATIONAL

டிங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.7 சதவீதம் அதிகரித்துள்ளது

புத்ராஜெயா, ஆகஸ்ட் 16: டிங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5 வரையிலான 31வது தொற்றுநோய் வாரத்தில் முந்தைய வாரத்தில் பதிவான சம்பவங்களோடு ஒப்பிடும்போது 4.7 சதவீதம் (2,542) அதிகரித்துள்ளது.

மேலும், குறிப்பிட்ட வாரத்தில் டிங்கி காய்ச்சல் இரண்டு இறப்புகள் பதிவாகி உள்ளன எனச் சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன் கூறினார்.

இதுவரை டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,193ஆக உள்ள நிலையில் மொத்தம் 49 இறப்புகள் பதிவாகியுள்ளன,” என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

‘ஹாட்ஸ்பாட்’ இடங்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தில் 93 ஆக இருந்தது, ஆனால், தற்போது அது 86 ஆக குறைந்துள்ளது என்று டாக்டர் முஹம்மது ராட்ஸி கூறினார்.

மழை மற்றும் வெப்ப வானிலை மாறிவரும் காலநிலை ஏடிஸ் கொசுக்கள் உற்பத்திக்கு சாதகமான சூழ்நிலையாகும் என்றார்.

“ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அழித்து, நீர்த்தேக்கங்களில் அவற்றை கொல்லும் பொருட்களைச் சேர்ப்பது சுற்றுச்சூழலில் ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைக்க மிகவும் பயனுள்ள வழிகள்,” என்று அவர் குறிப்பிட்டார்.

– பெர்னாமா


Pengarang :