NATIONAL

ஷா ஆலம் மாநகரின் ஆறு பகுதிகளில் திடீர் வெள்ளம்

ஷா ஆலம், ஆக 17- நேற்று மாலை பெய்த
அடைமழையைத் தொடர்ந்து ஷா ஆலம்
மாநகரின் ஆறு பகுதிகளில் திடீர் வெள்ளம்
ஏற்பட்டது.

ஜாலான் பெர்சியாரான் சுக்கான் செக்சன் 13
மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக ஷா ஆலம்
மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி முகமது
இக்பால் இப்ராஹிம் கூறினார்.

விளையாட்டரங்க சுற்றுவட்டத்திலிருந்து அக்கபெலா கட்டிடம்
செல்லும் சாலை, சுல்தான் அப்துல் அஜிஸ்
ஷா கோல்ப் கிளப், பழைய எம்.எஸ்.யு.
சாலை, பங்சாபுரி பெர்டானா ஆகிய
பகுதிகளும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதாக
அவர் சொன்னார்.

நேற்று மாலை 3.40 மணி தொடங்கி 4.47
வரை வெள்ளம் நீடித்தது.எனினும் நிலைமை
கட்டுப்பாட்டில் உள்ளது என்று அவர்
தெரிவித்தார்.

இதனிடையே, பத்து தீகா நிலையத்தில் நீர்
மட்டம் நேற்று மாலை 5.45 மணியளவில்
அபாயக் கட்டத்தைத் தாண்டி 5.66 மீட்டராக
இருந்ததாகச் சிலாங்கூர் மாநில வடிகால்
மற்றும் நீர் பாசனத் துறை கூறியது.


Pengarang :