SELANGOR

பொது இடங்களில் மரங்களை நட்டால் வெ.2,000 வரை அபராதம்- கோல லங்காட் நகராண்மைக் கழகம் எச்சரிக்கை

ஷா ஆலம், ஆக 17- விளையாட்டுத் திடல், சாலையோரம் மற்றும் பொது
இடங்களில் மக்கள் தோட்டம் போடுவதற்குக் கோல லங்காட்
நகராண்மைக் கழகம் தடை விதித்துள்ளது.

இத்தகைய நடவடிக்களை வட்டார மக்களுக்கு தொந்தரவாகவும்
அதிருப்தியை ஏற்படுத்தும் விதமாகவும் அமையும் என்று நகராண்மைக்
கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

காலி இடங்கள், திடல்கள், விளையாட்டு மைதானங்கள், சாலையோரங்கள்,
குடியிருப்பின் பின்புறத் வழித்தடங்கள் போன்ற இடங்களில் வாழை,
தென்னை, மா, செராய் மற்றும் காய்கறிகளைப் பயிரிட வேண்டாம் என
பொது மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

இதுபோன்றச் செயல்கள் அண்டை அயலாருக்கு தொந்தரவையும்
அதிருப்தியையும் ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.

இத்தகையக் குற்றங்களைப் புரிவோருக்கு 1976ஆம் ஆண்டு ஊராட்சி
மன்றச் சட்டத்தின் 102(டி) பிரிவின் கீழ் 2,000 வெள்ளி வரை அபராதம்
விதிக்கப்படும் எனவும் நகராண்மைக் கழகம் எச்சரித்தது.


Pengarang :