SELANGOR

மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளைக் கொண்டு மக்களுக்கு ஊக்குவிப்பு – உலு சிலாங்கூர் நகராண்மை கழகம்

ஷா ஆலம், ஆகஸ்ட் 22: பிளாஸ்டிக் பைகள் இல்லா பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கும்
வகையில் உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் (எம்பிஎச்எஸ்) அதன் நிர்வாகப் பகுதியில்
உள்ள மக்களை மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளைக் கொண்டு வர ஊக்குவிக்கிறது.

2025 ஆம் ஆண்டளவில் நாடு முழுவதும் உள்ள அனைத்து வளாகங்களிலும் வணிகத்
துறைகளிலும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை அகற்றுவதற்கான அரசாங்கத்தின்
நோக்கத்திற்கான ஆதரவின் அடையாளமாக இந்த திட்டம் இருப்பதாக உலு சிலாங்கூர்
நகராண்மை கழகம் தெரிவித்துள்ளது.

கோலா குபு பாரு நகரைச் சுற்றியுள்ள பல கடைகள் முன் காட்சி படுத்துவதற்காக

பிளாஸ்டிக் பையில்லா பிரச்சார ஸ்டிக்கர்களை  எம்பி எச்எஸ்யின் தலைவர் முகமட்
ஹஸ்ரி நோர் முகமட் வழங்கினார்.

இது எதிர்காலத்தில் இந்தத் திட்டத்தை ஆதரிக்கும் மற்றும் தொடர்வதற்கான
அடையாளமாக உள்ளது,  என்று எம்பி எச்எஸ்யின் முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது. .

பிளாஸ்டிக் பை மற்றும் பாலீஸ்டிரின் இல்லாப் பிரச்சாரம் ஆகஸ்ட் 19 அன்று கோலா குபு பாருவில் உள்ள உலு சிலாங்கூர் மாவட்டத்தில் நடைபெற்ற வாகன இல்லா தினத்தில் தொடங்கப்பட்டது.

ஒரு முறை   மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கழிவு  மாசுபாட்டைக் கையாள்வதில்  அரசாங்கம்   கொண்டுள்ள  கொள்கையை   வலியுறுத்தும்  விதமாக இந்த பிரச்சாரம்  மேற்கொள்ளப்படுகிறது. நாட்டில் தூய்மையை  வளர்க்கும்  நீண்ட கால  திட்டங்களில்  இதுவும் ஒன்றாகும்.


Pengarang :