NATIONAL

அம்பாங் நீதிமன்றக் கட்டிடம் டிசம்பர் மாதம் பூர்த்தியாகும்- அமைச்சர் அஸாலினா தகவல்

கோலாலம்பூர், ஆக 29- நான்கு செஷன்ஸ்
நீதிமன்றங்கள் மற்றும் ஆறு மாஜிஸ்திரேட்
நீதிமன்றங்களை உள்ளடக்கிய அம்பாங்
புதிய நீதிமன்ற வளாகக் கட்டுமானம் வரும்
டிசம்பர் 17 ஆம் தேதி நிறைவடையும் என்று
பிரதமர் துறை (சட்டம் மற்றும் நீதித்துறை
சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ
அஸாலினா ஒத்மான் கூறினார்.

நீதிமன்றக் குரல் வாக்குமூலங்களை எழுத்துப்
படிவங்களாக மாற்றும் (ஆர்.வி.டி.) அமைப்பு
உள்ளிட்ட

அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய
இந்த நீதிமன்றத் திட்டத்தின் கட்டுமானம்
கடந்த ஆகஸ்டு 21ஆம் தேதி வரை 85.34
விழுக்காடு பூர்த்தியடைந்திருந்தது என்று
அவர் சொன்னார்.

இந்த நீதிமன்றத்தின் கட்டுமானம் 10வது
மலேசியா திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
எஞ்சியுள்ளப் பணிகளை முடிப்பதற்காக
12வது மலேசியா திட்டத்தின் முதல் ரோலிங்
முன்னெடுப்பின் கீழ் இத்திட்டம் மறு
அமலாக்கம் கண்டது என்று அவர் ஒரு
அறிக்கையில் தெரிவித்தார்.

மூன்று செஷன்ஸ் நீதிமன்றங்கள் மற்றும்
மூன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களைக்
கொண்ட அம்பாங் நீதமன்றம் தற்போது
அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகக்
கட்டிடத்தில்

வாடகைக்குச் செயல்பட்டு வருகிறது என்று
அஸாலினா கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தின் அம்பாங்கைத் தவிர
மேலும் ஆறு புதிய நீதிமன்றங்கள்
கட்டப்பட்டு வருகின்றன, அவை கெடாவின்
சிக், ஜோகூர் மாநிலத்தின் பெங்காராங்,
பகாங் மாநிலத்தின் தெமர்லோ, பேராக்
மாநிலத்தின் ஈப்போவில் உள்ள செஷன்ஸ்
மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்ற வளாகம்,
ஜோகூர் பாரு நீதிமன்ற வளாகம் மற்றும்
கிளந்தான் மாநிலத்தின் பாச்சோக் நீதிமன்றம்
ஆகியவையே நிர்மாணிப்பில் உள்ள புதிய
நீதிமன்றங்களாகும்.

இவை தவிர, தற்போதுள்ள நீதிமன்றங்களை
மேம்படுத்தும் திட்டம் நாடு முழுவதும்
தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது
என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :