NATIONAL

அனைத்து இன மக்களின் நலனிலும் கவனம் செலுத்துவேன்- மந்திரி பெசார் வாக்குறுதி

கோலாலம்பூர், ஆக 29 – ஆறு மாநிலங்களில்
அண்மையில் நடைபெற்று முடிந்த
தேர்தல்களில் பக்கத்தான் ஹராப்பான்
கூட்டணிக்கு மலாய் வாக்காளர்களின் ஆதரவு
அவ்வளவாக கிடைக்காத நிலையில்
அவர்களது ஆதரவை பெறுவதற்காக
சிலாங்கூர் அரசாங்கம் மலாய்க்காரர்கள்
நலனில் மட்டும் முழுமையாக கவனம்
செலுத்தாது.

மாறாக, இன பாகுபாடு இன்றி அனைத்து
குடிமக்களும் நியாயமாக நடத்தப்படுவதை
ஆளும் பக்காத்தான்

ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி
கூட்டணி உறுதிப்படுத்தும் என சிலாங்கூர்
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கூறினார்.

மந்திரி புசாராகிய நான் மலாய்க்காரர்
மற்றும் முஸ்லீமாக இருந்தாலும் சீனர்கள்,
இந்தியர்கள், கடசான்கள் மற்றும் டுசுன்கள்
என அனைத்து மக்களின் நலன்கள் மீதும்
கவனம் செலுத்துவேன் என அவர்
தெரிவித்தார்.

இங்குள்ள ராயல் லேக் கிளப்பில் நேற்றிரவு
நடைபெற்ற சிலாங்கூர் இந்திய நிர்வாக
அதிகாரிகளின் சங்க நிகழ்வில்
உரையாற்றியபோது அவர் இவ்வாறு
சொன்னார்.

இந்திய விவகாரங்கள் மந்திரி புசார்
அலுவலகத்தின் பொறுப்பிற்கு கீழ் இருந்து
வருவதாகவும் இதற்கு முன்

அதனை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்
கவனித்து வந்ததாகவும் அவர் கூறினார்.

பல்வேறு சமூக நல திட்டங்கள், இரண்டு
தொழில்முனைவர் திட்டங்கள், ஆவணங்கள்
இல்லாதவர்களுக்கான அடையாளக் கார்டு
பதிவு, தமிழ்ப் பள்ளிகள் மற்றும்
ஆலயங்களுக்கான உதவிகளும் இந்திய
சமூகத்திற்கான மாநில அரசாங்கத்தின்
உதவும் முயற்சிகளில் அடங்கும் என அவர்
குறிப்பிட்டார்.

மலாய்க்காரர் அல்லாதாரின் ஆதரவு குறித்து
பக்காத்தான் ஹராப்பான் உறுப்பினர்கள்
அலட்சியமாக இருந்துவிடக்கூடாது என்றும்
மலாய்க்காரர் அல்லாதரின் வாக்குகளில் 1 %
விழுக்காடு திரும்பினாலும் அரசாங்கத்தின்
நிலைமைக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும்

என அமிருடின் நினைவுறுத்தினார்.


Pengarang :