SELANGOR

RM100 நர்சரி பதிவு கட்டணத்திற்கு ஊக்கத் தொகையின் விண்ணப்பம் செப்டம்பர் 1 முதல் திறக்கப்படும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 29: ஒருமுறை மட்டும் வழங்கும் RM100 நர்சரி பதிவு கட்டணத்திற்கான ஊக்கத் தொகையின் விண்ணப்பம் (Pintas) செப்டம்பர் 1 முதல் திறக்கப்படும் என பெண்கள் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறையின் பொறுப்பு உறுப்பினர் தெரிவித்தார்.

RM5,001 முதல் RM8,000 வரை குடும்ப வருமானம் பெறும் பெற்றோர்கள் யாயாசன் வாரிசான் அனாக் சிலாங்கூர் (யவாஸ்) நிர்வாக ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அன்ஃபால் ஷாரி கூறினார்.

“இந்த திட்டத்தின் மூலம் நாங்கள் வேலை செய்யும் பெற்றோரின் சுமையைக் குறைக்க முடியும் மற்றும் சிறுவயதிலிருந்தே குழந்தைகள் போதுமான கவனிப்பைப் பெறுவதை உறுதி செய்ய முடியும்” என்றார்.

இதற்கிடையில், சிலாங்கூரில் உள்ள சமூக நலத்துறையில் பதிவு செய்யப்பட்ட நர்சரிகளில் பயிலும் குழந்தைகள் மட்டுமே இந்த ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர்கள்.மேலும், இந்த உதவி ஒரு குடும்பத்திற்கு நான்கு வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று யாவாஸ் தெரிவித்தது.

“விண்ணப்பதாரரின் பெற்றோர்கள் மலேசிய குடிமக்களாகவும், சிலாங்கூர் வாக்காளர்களாகவும், சிலாங்கூர் மாநிலத்தில் வசிப்பவர்களாகவும் பணி புரிபவர்களாகவும் இருக்க வேண்டும்,” என்று தெரிவிக்கப்பட்டது.

pintas.yawas.com.my என்ற இணைப்பின் மூலம் பதிவு செய்த 21 நாட்களுக்குள் சில ஆவணங்களைச் சேர்த்து இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஆவணங்கள் பின்வருமாறு பதிவேற்ற வேண்டும்:

♣ குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் நகல்

♣ விண்ணப்பதாரரின் அடையாள அட்டையின் நகல்

♣ வாக்காளர் பதிவேட்டின் நகல்

♣ விண்ணப்பதாரர் மற்றும் மனைவியின் சமீபத்திய சம்பள அறிக்கையின் நகல்

♣ வங்கிக் கணக்கின் நகல்

♣ சட்டப்பூர்வ அறிவிப்பு கடிதம் அல்லது தத்தெடுப்பு சான்றிதழின் நகல்

♣ 2023 சேர்க்கைக்கான நர்சரி பதிவு கட்டணம் செலுத்திய ரசீது நகல்

சிலாங்கூர் பட்ஜெட் 2023 ஐ சமர்ப்பித்தபோது, நான்கு வயது மற்றும் அதற்கு குறைவான குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு டேகேர் அல்லது நர்சரியில் சேர்ப்பதற்காக RM100 ஒருமுறை வழங்கப்படும் என டத்தோ மந்திரி புசார் அறிவித்தார்.


Pengarang :