NATIONAL

சிறப்பு நடவடிக்கையில் 63 பேர் கைது

ஜொகூர் பாரு, செப் 5: இன்று காலை நகரைச் சுற்றியுள்ள இரண்டு பொழுதுபோக்கு மையங்களில் நடந்த சிறப்பு நடவடிக்கையில், போதைப்பொருள் தொடர்பாகவும் மற்றும் சரியான பயண ஆவணங்கள் இல்லாத காரணத்தாலும் நான்கு வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 63 பேர் கைது செய்யப்பட்டனர். .

போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை, ஒருமைப்பாடு மற்றும் தரநிலை இணக்கத் துறை மற்றும் ஜொகூர் காவல் படைத் தலைமையகத்தால் அந்த இரண்டு பொழுதுபோக்கு மையங்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 210 நபர்கள் சோதனை செய்யப்பட்டதாகத் ஜொகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமருல் ஜமான் மாமட் தெரிவித்தார்.

இன்று நள்ளிரவு 12.45 முதல் அதிகாலை 3 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், 19 முதல் 56 வயதுக்குட்பட்ட 22 பெண்கள் உட்பட அனைவரும் மேல் விசாரணைகளுக்காக இரண்டு நாட்கள் விளக்கமறியலில் வைக்க படுவர் என்று அவர் கூறினார்.

“இருப்பினும், இரண்டு மையங்களும் செல்லுபடியாகும் வணிக உரிமங்களை கொண்டுள்ளன மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் செயல்படுகின்றன,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

குடிவரவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 6 (1) (c) மற்றும் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 15 (1) (a) ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.

– பெர்னாமா


Pengarang :