ANTARABANGSA

பூலாய் இடைத்தேர்தலில் 927 போலீஸ்காரர்கள் வாக்களிக்கின்றனர்

ஜோகூர் பாரு, செப் 5- பூலாய் இடைத் தேர்தலை முன்னிட்டு தொடக்க
வாக்களிப்பு இன்று நடைபெற்றது. இத்தேர்தலில் 927 போலீஸ்காரர்கள்
இங்குள்ள இரு வாக்குச் சாவடிகளில் தங்கள் ஜனநாயகக் கடமையை
நிறைவேற்றவுள்ளனர்.

கெம்பாஸ் போலீஸ் நிலையம் மற்றும் கடல் போலீஸ் துறையின்
இரண்டாவது பிராந்தியம் ஆகிய இடங்களில் உள்ள இரு வாக்குச்
சாவடிகளும் இன்று காலை 8.00 மணிக்கு திறக்கப்பட்டன. இந்த வாக்குச்
சாவடிகள் மாலை 5.00 மணிக்கு மூடப்படும்.

பூலாயில் இன்று காலை வானிலை தெளிவாக இருக்கும் வேளையில்
பிற்பகலில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை
கணித்துள்ளது.

உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ
சலாவுடின் ஆயோப் கடந்த ஜூலை 23ஆம் தேதி காலமானதைத்
தொடர்ந்து பூலாய் நாடாளுமன்றம் மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத்
தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

சிப்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்த மட்டில் தொடக்கக்
கட்ட வாக்களிப்பு நடைபெறவில்லை.

இந்த இடைத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. பக்கத்தான்
ஹராப்பான் சார்பில் சுஹைஸான் காயாட், பெரிக்கத்தான் நேஷனல்
சார்பில் ஜூல்கிப்ளி ஜாபர் போட்டியிடும் வேளையில் சம்சுடின் முகமது
பவுஸி சுயேட்சையாக களம் காண்கிறார்.


Pengarang :