SELANGOR

புயலில் பாதிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் கூரைகளைச் சீரமைக்க வெ.500,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், செப் 6 – தாமான் அம்பாங்
ஹிலிரில் ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த
இடியுடன் கூடிய மழையில் சேதமடைந்த
அடுக்குமாடி குடியிருப்பின் கூரையை
சரிசெய்ய 500,000 வெள்ளி நிதியை மாநில
அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

அக்குடியிருப்பில் பழுதுபார்ப்புப் பணிகள்
தற்போது நடைபெற்று வருவதாகவும் அடுத்த
சில வாரங்களில் அது நிறைவடையும் என்றும்
எதிர்பார்க்கப்படுவதாகவும் அடிப்படை
வசதிகள் துறைக்கான

ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம்
கூறினார்.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட
குடியிருப்புகளில் பழுதுபார்ப்புப் பணி
முற்றுப்பெறும் வரை
பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூக நலத்துறை
மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை
நிறுவனம் மூலம் மாநில அரசு தற்காலிக
தங்குமிடங்களை ஏற்படுத்தித் தந்துள்ளதாக
அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் இந்த
இக்கட்டான காலத்தில் சோதனைகளை
எதிர்கொள்ளும் மனோ தைரியத்தைக்
கொண்டிருப்பார்கள் என்று நான்
நம்புகிறேன் என அவர் மேலும் சொன்னார்.

அவர்களின் தேவைகளைப் பூர்த்தி
செய்வதிலும் அவர்களின் நலனைக்

கவனிப்பதிலும் தொகுதி சேவை மையம்
தொடர்ந்து உதவும் என்று பாதிக்கப்பட்டப்
பகுதியைப் பார்வையிட்டப் பின்னர் அவர்
தெரிவித்தார்.

கடந்த மாதம் 27ஆம் தேதி தாமான் அம்பாங்
ஹிலிரில் ஏற்பட்ட இடி மற்றும் புயலுடன்
கூடிய கனத்த மழையில் உணவுக் கடைகள்
மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளின்
கூரைகள் காற்றில் பறந்தன.


Pengarang :