NATIONAL

அனைத்து கட்டுமான ஒப்பந்ததாரர்களும் கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியத்தில் (சிஐடிபி) பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்

கோலாலம்பூர், செப்.6 – சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் அனைத்து கட்டுமான ஒப்பந்ததாரர்களும் கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியத்தில் (சிஐடிபி) பதிவு செய்யப்பட்டிருப்பது உள்ளாட்சி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

ஒப்பந்தக்காரர்கள் “ஒப்பந்ததாரர் பதிவு சான்றிதழை“ வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் கூறினார், ஏனெனில் இந்த நிபந்தனை உள்ளாட்சி மேம்பாட்டு அமைச்சகத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்ட போதிலும் தற்போது அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

“சில சமயங்களில் சிஐடிபியில் பதிவு செய்யப்படாத ஒப்பந்தக்காரர்கள் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்கின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான திறன்கள் இல்லாததால், வேலையின் தரம் குறைகிறது மற்றும் பயனாளிகள் இழப்பை சந்திக்க நேரிடுகிறது.

அதனால்தான், சீரமைப்புப் பணிகளில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் பதிவு செய்யப்பட வேண்டும், ”என்று அவர் கோலாலம்பூரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடந்த நான்காவது மலாய் பூமிபுத்ரா ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் மற்றும் இளம் பூமிபுத்ரா ஒப்பந்தக்காரர்கள் மாநாட்டில் அவர் இவ்வாறு கூறினார்.

சிஐடிபியில் ஒப்பந்ததாரர்களின் கட்டாய பதிவு மூலம், வேலையின் தரம் உறுதி செய்யப்படும், மேலும் தகுதியான ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கும், இது போன்ற புதுப்பிப்புகளை சொந்தமாகச் செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.

இந்நிகழ்வில், சங்கத்தைச் சேர்ந்த ஆறு ஒப்பந்ததாரர்களுக்கு சிறந்த இளம் ஒப்பந்ததாரர் விருதையும் ஃபாடில்லா வழங்கினார்.

– பெர்னாமா


Pengarang :