SELANGOR

ரத்த தானம் மற்றும் அடிப்படை சுகாதார பரிசோதனை – கிள்ளான் மாநகராட்சி

ஷா ஆலம், செப் 6 : கிள்ளான் சுல்தான் ஆலம் ஷா கட்டிடத்தில் நேற்று நடைபெற்ற ரத்த தானம் மற்றும் அடிப்படை சுகாதார பரிசோதனை நிகழ்ச்சியில் கிள்ளான் மாநகராட்சியின் (MPK) பொது மக்கள் மற்றும் ஊழியர்கள் 300 பேர் கலந்து கொண்டனர்.

இரத்த மாற்றத் துறை, தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை மற்றும் கிள்ளான் மாவட்ட சுகாதார அலுவலகம் போன்ற பல நிறுவனங்களுடன் இணைந்து கிள்ளான் மாநகராட்சி இந்த பிரச்சாரத்தை ஏற்பாடு செய்துள்ளது.

மேலும், அனிகா சுகாதார மையம், ஸ்ரீ கோத்தா ஸ்பெஷலிஸ்ட் சுகாதார மையம் மற்றும் டிரெண்டி ஐ ஹப் நிறுவனம் இதில் ஈடுபட்டுள்ளன.

அந்நிகழ்வில் பிஎம்ஐ (உடல் எடை குறியீடு), கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், குளுக்கோஸ், மனநல பரிசோதனை, உடல் அமைப்பு மற்றும் கண் பரிசோதனை ஆகிய சுகாதார பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், மருந்தக கண்காட்சியும் நடத்தப்படுவதுடன், சம்பந்தப்பட்ட ரத்த தானம் செய்பவர்களுக்கு அவர்களின் பங்களிப்புக்காக பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.


Pengarang :