ANTARABANGSA

மியன்மாரில் வன்முறையை முடிக்கு கொண்டு வரும் ஆசியான் முயற்சிக்கு அமெரிக்கா ஆதரவு

ஜாகர்த்தா, செப் 7- கடந்த 2021ஆம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்றியது
முதல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மியன்மாரின் ஆளும் ஜூந்தா
அரசாங்கம் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுவரும் நிலையில்
அந்நாட்டில் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஆசியான் முன்னெடுக்கும்
நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளதாக
அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

மியன்மார் விரிவான ஜனநாயக நடைமுறைக்கு மீண்டும் திரும்புவதற்கு
ஏதுவாக அந்நாட்டில் நிகழ்ந்து வரும் வன்முறைகளைக் முடிவுக்கு
கொண்டு வருவதற்கும் சட்டவிரோதமான முறையில் தடுத்து
வைக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கும் அமெரிக்கா அந்நாட்டின் மீது
தொடர்ந்து நெருக்குதலைக் கொடுத்து வரும் என்று துணையதிபர் கமலா
ஹரிஸ் கூறினார்.

ஜாகர்த்தாவில் நடைபெற்று வரும் தென்கிழக்காசிய நாடுகள் அமைப்பான
ஆசியானின் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்
அவர் இவ்வாறு கூறியதாக ஜெர்மன் நாட்டின் டிபிஏ செய்தி நிறுவனம்
தெரிவித்தது.

தென்கிழக்காசியாவுடனான நீடித்த மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த
உறவை தொடர்ந்து வலுப்படுத்துவதில் வாஷிங்டனுக்கு உள்ள
கடப்பாட்டையும் அவர் உறுதிப்படுத்தியதாக அச்செய்தியில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட் ஆங் சான் சூ கியை மியன்மார்
இராணுவம் கடந்த 2021ஆம் தேதி வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியதோடு
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான சூ கியை சிறையிலும்
தள்ளியது.

மியன்மார் தற்போது ஏறக்குறைய உலக நாடுகளிடமிருந்து தனித்து
விடப்பட்டுள்ளது.


Pengarang :