SELANGOR

நிர்வாக பலவீனங்களை மூடி மறைக்க வேண்டாம்- அரசாங்கத் தலைமைச் செயலாளர் வலியுறுத்து

சிப்பாங், செப் 8 – தேசிய நலன்களைப்
பாதிக்கக்கூடிய நிர்வாக பலவீனங்கள் மற்றும்
அரசாங்கத்தின் செலவினங்களில் கசிவு
ஆகியவற்றின் மீது கூடுதல் கவனம்
தேவைப்படுகிறது. இப்பிரச்சனைகளுக்கு
தீர்வு காணப்பட வேண்டுமே தவிர மூடி
மறைக்கக்கூடாது என்று அரசாங்கத்
தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது
ஸூக்கி அலி கூறினார்.

இத்தகைய பலவீனங்கள் எழும்

பட்சத்தில் அதிகார துஷ்பிரயோகம், ஊழல்
மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் உண்டாக
இடமும் வாய்ப்புகளும் இருப்பதாக அவர்
கூறினார்.

சட்ட அமைப்பிலும் உள்கட்டுப்பாட்டு
முறையிலும் பலவீனம் இருந்தால்
ஊழலுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்
எனவும் அவர் சொன்னார்.

எடுத்துக்காட்டாக,
சிவப்பு நாடா எனப்படும் நிர்வாக நடைமுறை
காரணமாக சேவை வழங்குவதில்
ஏற்படக்கூடிய தாமதம் , விரைவான
தேவையை விரும்பும் வாடிக்கையாளர்களால்
ஊழலுக்கான வாய்ப்புகளைத் திறக்கும் என
அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, திறனற்றது மற்றும் ஊழலுக்கான
வாய்ப்புகளை

உருவாக்குவது என அடையாளம்
காணப்படும் நடைமுறைகள் மாற்றப்பட்டு
மேம்படுத்தப்பட வேண்டும் என்று தேசிய
அளவிலான நிர்வாகம், உயர்நெறி மற்றும்
ஊழல் எதிர்ப்பு ஆய்வு மாநாட்டின் நிறைவு
விழாவில் அகமது ஜூக்கி கூறினார்.

அவரது உரையை பொதுப்பணித் துறை
துணைத் தலைமை இயக்குநர் (மேம்பாடு)
டத்தோ அஸார் அகமது வாசித்தார்.

ஊழல், மற்றும் அதிகாரத்
துஷ்பிரயோகத்திலிருந்து தேசிய வளர்ச்சி
செயல் திட்டம் விடுபட்டிருப்பதை
உறுதிப்படுத்த அரசாங்கம் உறுதி
பூண்டுள்ளதாக முகமட் ஜூகி கூறினார்.

ஊழல் இல்லாத அரசு நிர்வாகம், சிறப்பான
நிர்வாக முறை மற்றும் உயர்

நெறியிலிருந்து தொடங்குகிறது என்றும்
அவர் கூறினார்.


Pengarang :