NATIONAL

ஆசிரியர்கள் சமூக ஊடக உள்ளடக்கத்திற்கு மாணவர்களைப் பயன்படுத்தும் பிரச்சனை கையாளப்படும் – கல்வி அமைச்சு

கூச்சிங், செப் 17 – ஆசிரியர்கள் சமூக ஊடக உள்ளடக்கத்திற்கு மாணவர்களைப் பயன்படுத்தும் பிரச்சனையைக் கையாள்வதில் கல்வி அமைச்சகம் உறுதியாக உள்ளது.

மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய வழிகாட்டுதல்கள் வெளியிடப் பட்டுள்ளதாக அமைச்சர் ஃபத்லினா சிடெக் கூறினார்.

“முன்மாதிரிகள் இல்லாத இந்த காலகட்டத்தில், கல்வியாளர்கள் சமுதாயத்தில் முன்மாதிரியாக மாற வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு ஆகும்.

ok upload

“மலேசியர்கள் தங்கள் ஆசிரியர்களின் பிரதிபலிப்பு ஆவர் (நேர்மைமையான ஆசிரியர்கள், உயர்ந்த நாகரிகம் மற்றும் ஒழுக்கம் கொண்ட ஆசிரியர்கள்),“ என அவர் கூறினார்.

நேற்றிரவு இங்குள்ள பத்து லிண்தாங் ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் நடந்த மலேசியா தின விழாவில், “ஆசிரியர்கள் தேசியப் போதனையைப் பாதுகாக்க வேண்டும் மற்றும் நாட்டின் கல்விக்காக உண்மையாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

அந்நிகழ்வில் சிறு பராமரிப்பு பணிகளுக்காக ஆசிரியர் கல்வி நிறுவனத்திற்குக் கல்வி அமைச்சில் இருந்து ரிம150,000 ஒதுக்கீடு செய்வதாக ஃபத்லினா அறிவித்தார்.

– பெர்னாமா


Pengarang :