NATIONAL

அவசர நிலைகளில் பள்ளிகளின் பராமரிப்புச் செலவுக்கு கல்வி அமைச்சகம் RM80 மில்லியன் ஒதுக்கீடு

கோலாலம்பூர், செப் 27 – இந்த ஆண்டு வெள்ளம், புயல் அல்லது தீ போன்ற அவசர நிலைகளில் பள்ளிகளின் பராமரிப்புச் செலவுக்குக் கல்வி அமைச்சகம் RM80 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது.

கட்டமைப்புகள் மற்றும் கட்டுமானமற்ற கட்டிடங்கள், கூரை, மின் வயரிங், வேலி அமைத்தல், வடிகால் மற்றும் பிற சிறிய பராமரிப்பு உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் ஃபத்லினா சிடெக் கூறினார்.

“திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதமானது ஒதுக்கீடு காரணத்தால் அல்ல, மாறாக அணுகல், தளத்தில் நிலப்பரப்பு மற்றும் ஒப்பந்ததாரரின் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் வடிவமைப்பை சரிசெய்ய வேண்டிய அவசியம் போன்ற பிற காரணிகளால் ஆகும்” என்று அவர் கூறினார்.

மேலும், கல்வி அமைச்சு கீழ் உள்ள பள்ளிகளில் ஊனமுற்றோருக்கான நட்பு (OKU) வசதிகளை வழங்குவதில் அமைச்சகம் கவனம் செலுத்தும் என்று ஃபத்லினா கூறினார்.

உதாரணத்திற்கு பள்ளிகளின் தரை தளத்திற்கு வகுப்புகளை நகர்த்துவது, கழிப்பறை இல்லாவிட்டால் ஆசிரியர்களின் கழிப்பறையை பயன்படுத்த மாணவர்களை அனுமதிப்பது அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு மொபைல் ரேம்ப் இருப்பது உள்ளிட்ட நியாயமான இடவசதிகளை வழங்குவதை கல்வி அமைச்ச் உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :