NATIONAL

அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கி சுங்கை பீசி சாலை கட்டங் கட்டமாக மூடப்படும்

கோலாலம்பூர், செப் 29 – சுங்கை பீசி/ பெட்டாலிங் ஜெயா வரை செல்லும்
(ஃபிரேசர் பிஸினஸ் பார்க்) சுங்கை பீசி சாலை மற்றும் லோக் இயூ
சாலைச் சுற்றுவட்டம் ஆகியவற்றை இம்மாதம் 30 தொடங்கி வரும் 2024
செப்டம்பர் 29 வரை அனைத்து வாகனங்களுக்கும் மூடும் திட்டம் ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தின் படி அச்சாலை வரும் அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கி
அடுத்தாண்டு அக்டோபர் 1ஆம் தேதி வரை போக்குவரத்துக்கு மூடப்படும்
என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் அறிக்கை ஒன்றில் கூறியது.
சாலை விரிவாக்கம், சீரமைப்பு மற்றும் லெக் இயூ பகுதியில் மேம்பால
நிர்மாணிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்த சாலை
மூடப்படுவதாக அது தெரிவித்தது.

லெக் இயூ சாலையை விரிவுபடுத்தும் குத்தகையை கோலாலம்பூர் மாநகர்
மன்றம் பெர்த்தாமா மக்கோர் சென்.பெர்ஹாட் நிறுவனத்திடம்
ஒப்படைத்துள்ளது. இப்பணிகள் அக்டோபர் மாதம் தொடங்கி வரும் 2025
டிசம்பர் 31ஆம் தேதி முற்றுப் பெறும். இப்பணிகள் தற்போது துரிதகதியில்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்த அறிக்கையில்
குறிப்பிட்ப்பட்டுள்ளது.

வாகனமோட்டிகள் இந்த சாலைக்குப் பதிலாக வேறு மாற்று வழிகளைப்
பயன்படுத்தலாம் என்றும் மாநகர் மன்றம் ஆலோசனை கூறியது.
கட்டுமானப் பகுதிகளில் பாதுகாப்பாகவும் குழப்பமின்றியும் பயணத்தை
மேற்கொள்ள ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள அறிவிப்பு பலகைகளையும்
போக்குவரத்து போலீசாரின் உத்தரவையும் பின்பற்றி நடக்கும்படி
வானமோட்டிகளை அது கேட்டுக் கொண்டது.


Pengarang :