NATIONAL

டிங்கி தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் – மந்திரி புசார்

ஷா ஆலம், செப் 29: சிலாங்கூரில் ஏடிஸ் பாதிப்புகள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து டிங்கி தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப் பிடிக்குமாறு டத்தோ மந்திரி புசார் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

அவை கொசுக்கள் பெருகும் இடங்களை அழித்தல், திறந்த நீர் கொள்கலன்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் ஆகும் என டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

மேலும், பூங்கொத்து கோப்பைகளில் உள்ள தண்ணீரை மாற்றுவது, பூச்சாடிகளில் உள்ள தண்ணீரை காலி செய்யவும் மற்றும் தினமும் மழை நீர்  தேங்கும்  இடங்களை சுத்தம் செய்வது கொசுக்கடியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் என அவர் அறிவுறுத்துகிறார்.

“சிலாங்கூரில் டிங்கி சம்பவங்கள் அதிகரிப்பு பல தனி நபர்களையும் குடும்பங்களையும் கவலையடையச் செய்கிறது. தடுப்பு மற்றும் கூட்டுப் பொறுப்பைக் கடைப்பிடிப்பதன் மூலம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப் படுத்தி டிங்கி சம்பவங்களைக் குறைக்க முடியும்.

“டிங்கி காய்ச்சலில் இருந்து நாமும் நம் குடும்பத்தினரும் பாதுகாக்கப் படுவதை உறுதிசெய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்று அவர் முகநூலில் மூலம் கூறினார்.


Pengarang :