ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக்குச் சுகாதாரப் பரிசோதனைகள் அவசியம் 

சுபாங் ஜெயா, அக் 2: ஶ்ரீ செர்டாங் தொகுதியின்  சட்டமன்ற உறுப்பினர் மக்களின்  ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு  சுகாதாரப் பரிசோதனைகளை முக்கிய திட்டமாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

“இந்த நாட்டில் நாம் நோய்வாய்ப்பட்டால் தான் மருத்துவமனைக்கு செல்வதை தடுக்கும்  விதமாக சுகாதார விழிப்புணர்வுகளை ஏற்படுத்த   வேண்டும்.  அதற்கு, உடல்  ஆரோக்கியத்தின்  முக்கியத்துவத்தை அறிந்து , காலத்தோடு  உடல்  ஆரோக்கிய பரிசோதனைகளை  அனைவரும் மேற்கொள்ள வேண்டும்   அதன் வழி  கடும்  ஆரோக்கிய குறைவை  தவிர்க்கலாம்.

இதுபோன்ற திட்டம் சுகாதாரப் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே அதிகரிப்பதால்  ஆரம்பத்திலேயே நோய்களைத் தடுக்கும் முடியும் என்று அப்பாஸ் அஸ்மி கூறினார்.

.”ஶ்ரீ செர்டாங் தொகுதியின் முன்னாள் பிரதிநிதியும் (டாக்டர் சித்தி மரியா மாமுட்) அடிக்கடி உடல்நலப் பரிசோதனை நிகழ்ச்சிகளை மாநிலத்தில் நடத்தினார். அதனால் நானும்  சில மாற்றங்களுடன்  உடல்  அரோக்கிய பரிசோதனைகளை  இங்கு தொடர்வேன்,” என்று அவர் கூறினார்.

பல்வேறு முகவர் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக அப்பாஸ் மேலும் கூறினார், இதனால் சுகாதாரம் தொடர்பான திட்டங்களை மேம்படுத்த முடியும், மக்கள் பயனடைவார்கள்.


Pengarang :