NATIONAL

ஆண்டு இறுதியில் டிங்கி சம்பவங்கள் அதிகரிகக்கூடும்- சுகாதார அமைச்சு எச்சரிக்கை

கோலாலம்பூர், அக் 3- டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை
இவ்வாண்டு இறுதியில் அபரிமிதமாக அதிகரிக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளாக பதிவான டிங்கி
சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு கணிக்கப்படுவதாகச்
சுகாதார அமைச்சின் பொது மருத்துவச் சுகாதார நிபுணர் டாக்ட வான் மிங்
கியோங் கூறினார்.

குறிப்பிட்ட சில இடங்களில் ஏற்படும் குருதி நுண்ணுயிர் வகைகளின்
மாற்றங்களின் அடிப்படையில் நான்கு அல்லது ஐந்தாண்டுகளுக்கு ஒரு
முறை இந்த ஏற்றம் உச்சக்கட்டத்தை அடைவதாக அவர் சொன்னார்.

கடந்த 2019ஆம் ஆண்டில் இந்த நோய் உச்சத்தை அடைந்தது. மறுபடியும்
இவ்வாண்டில் அல்லது அடுத்தாண்டில் இது நிகழலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் பரவும் குருதி
நுண்ணுயிர் வகைகள் வைரஸ் இதற்கு காரணமாக விளங்கும் என அவர்
தெரிவித்தார்.

டிங்கி நோயில் நான்கு வகை குருதி நுண்ணுயிர் வகைகள் உள்ளன. இந்த
நுண்ணுயிர் வகைகள் வேறு இடத்திற்கு மாறும்போது அது ஆதிக்கம்
பெறுகிறது. இந்த நுண்ணுயிர்க்கு எதிரான மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி
இன்னும் குறைவாக இருப்பதால் இவ்வாறு நிகழ்கிறது என்று அவர்
சொன்னார்.

ஒரு குறிப்பிட்ட குருதி நுண்ணுயிர் வகையின் தாக்கத்திலிருந்து மீண்டு
வரும் நோயாளி குறிப்பிட்ட அந்த நுண்ணுயிர் தாக்குதலிலிருந்து ஆயுள்
முழுமைக்கும் பாதுகாப்பை பெறுவார். ஒரு மனிதன் தன் வாழ்நாளில்
நான்கு முறை மட்டுமே டிங்கி பாதிப்பிலிருந்து மீள முடியும்

இருப்பினும், இரண்டாவது முறையாக டிங்கி காய்ச்சலுக்கு ஆளாகும் நபர்
கடுமையான மற்றும் ஆபத்தான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும்
என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :