NATIONAL

வெளிநாட்டினரால் நடத்தப்பட்ட உரிமம் இல்லாத ஒன்பது வணிக வளாகங்கள் மூடப்பட்டன

ஷா ஆலம், அக் 3: தாமான் செந்தோசா, கிள்ளானில் உள்ள கோல்டன் வில்லா அடிக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டினரால் நடத்தப்பட்ட உரிமம் இல்லாத ஒன்பது வணிக வளாகங்கள் கிள்ளான் மாநகராட்சியால் (எம்பிகே) மூடப்பட்டன.

கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் அந்த வணிக வளாகங்களைப் பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ரோஹிங்கியா பிரஜைகள் நடத்தி வருகின்றனர் என கண்டறியப்பட்டது என்று அதன் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் இயக்குனர் நோர்பிசா மஹ்ஃபிஸ் தெரிவித்தார்.

அங்குள்ள 10 வாளங்களில் உணவகங்கள், மளிகைக் கடைகள், முடிதிருத்தும் கடைகள், தையல் கடைகள் என பல்வேறு வணிக நடவடிக்கைகள் நடப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன எனக் கூறினார்.

“ஒன்பது வணிகங்கள் உரிமம் இல்லாமல் இயங்குகின்ற நிலையில் ஒரு வளாகத்தில் மட்டுமே உரிமம் உள்ளது. எனவே, 8 பறிமுதல் நடவடிக்கைகள், இரண்டு அபராதங்கள் மற்றும் வணிக நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த இரண்டு நோட்டிஸ்களை எம்பிகே வெளியிட்டது,” என்று அவர் கூறினார்.

அனைத்து நடவடிக்கைகளும் எம்பிகேயின் விதிகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக நோர்பிசா விளக்கினார்.


வெளிநாட்டவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அவ்வப்போது தீவிரப்படுத்தப்படும் சோதனை நடவடிக்கைகள் உட்பட குடிமக்கள் அல்லாதவர்களுக்கு வணிகம் செய்ய உரிமம் வழங்குவதில் எம்பிகே சமரசம் செய்து கொள்ளாது ,” என்றார்.


Pengarang :