NATIONAL

இன்று முதல் மூன்று மாநிலங்களில் தொடர் மழை எச்சரிக்கை

கோலாலம்பூர், அக் 4: இன்று முதல் எதிர்வரும் வியாழன் வரை
பெர்லிஸ், கெடா மற்றும் பினாங்கில் தொடர்ந்து மழை பெய்யும் என
மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மெட்மலேசியா வெளியிட்டுள்ள அறிக்கையில் 10 மாநிலங்களில்
பிற்பகல் 4 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என
எச்சரிக்கை விடுத்துள்ளது.

கெடாவில் (லங்காவி, கூலிம், பண்டார் பாரு), பினாங்கில் (செபராங்
பெராய் தெங்கா, செபராங் பேராய் செலாத்தான்), பகாங்கில் (பெந்தோங்,
ரொம்பின்) மற்றும் கிளந்தானில் (தும்பாட், பாசிர் மாஸ், கோத்தா பாரு,
ஜெலி, தனா மேரா, பச்சோக், மாச்சாங், பாசிர் புத்தே) ஆகிய
இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என மெட்மலேசியா
அறிவித்துள்ளது.

மேலும், இதே வானிதான் திரங்கானுவில் (பெசுட், செத்தியூ, கோலா
நெருஸ்), சிலாங்கூரில் (சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், உலு
சிலாங்கூர், கோம்பாக்), நெகிரி செம்பிலானில் (கோலா பில்லா,
ஜெம்போல், தம்பின்), மலாக்காவில் (ஜாசின்); ஜொகூரில் (தங்காக்,
மெர்சிங், கோத்தா திங்கி); மற்றும் சபாவில் (கினாபாதங்கன் மற்றும்
சண்டாகான்) ஆகிய இடங்களிலும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– பெர்னாமா


Pengarang :