SELANGOR

 ‘ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்’ மூலம் பயனர்கள் நேரடியாக வங்கிக் கணக்குகளில் பணம் பெற முடியும்

ஷா ஆலம், அக் 4: அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) ‘ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்’ (ஆர்விஎம்) எனப்படும் மறுசுழற்சி இயந்திரத்தை ஏற்பாடு செய்துள்ளது. இது பயனர்கள் நேரடியாக வங்கிக் கணக்குகளில் பணம் பெற அனுமதிக்கிறது.

அம்பாங் ஜெயா நகராண்மை கழகம்  மறுசுழற்சி  பொருட்களுக்கு  இயந்திரத்தை பயன்படுத்தி   பணம் வழங்கும்  முதல்  நகராண்மையாக   விளங்கும். மறுசுழற்சி பொருட்களை அகற்றுவதில்    பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படத்தவும் மற்றும் அவர்களின் வசதிக்காகவும் அமைத்துள்ளது என முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

‘ரிவர்ஸ் வென்டிங் மெஷின்’ இயந்திரம் மெனாரா எம்பிஏஜ 1வது நிலை ஃபோயரில் அமைந்துள்ளது. ஏதேனும் கேள்விகள் இருந்தால் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது துப்புரவு துறையை 03-4285 7044 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

‘ரிவர்ஸ் வென்டிங் மெஷின்’ இயந்திரத்தின் செயல்பாடு பின்வருமாறு:

1. மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களில் QR குறியீடுகளை ஸ்கேன் செய்யவும் (பிளாஸ்டிக் பாட்டில்கள், பானம் கேன்கள், பான பெட்டிகள்)

2. இயந்திர அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு ‘ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்’ இயந்திரத்தில் உள் நுழைக்கவும். (கேன்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குடிநீர் பெட்டிகள்)

3. வங்கி கணக்கைப் பயன்படுத்தி பொருட்களின் தற்போதைய விலைக்கு ஏற்ப பணத்தைப் பெறுங்கள். எடுத்துக்காட்டு: ஒரு பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ஐந்து காசுகள் வழங்கப்படுகிறது.

4. மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களின் தொகை ‘ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்’ இயந்திரம் மூலம் சரி பார்க்கப்பட்ட பிறகு நேரடியாக பெறுநரின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.


Pengarang :