SELANGOR

சுங்கை லங்காட் நீர் சுத்திகரிப்பு ஆலையத்தின்  மேம்படுத்தல் வேலைகளுக்கு, ஆலை அடைப்பு, நீர் விநியோகம்  தடை படும்

உலு லங்காட், அக் 5: பயனர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள நீர் விநியோகத்தில் சமீபத்திய நிலையை அறிய பெங்குருசன் ஆயர் சிலாங்கூரின் அதிகாரப்பூர்வ சமூகப் பக்கத்தைப் பார்க்கவும்.

அக்டோபர் 10 அன்று, சுங்கை லங்காட் நீர் சுத்திகரிப்பு ஆலையத்தின் (எல்ஆர்ஏ) கருவிகள் மேம்படுத்தப்பட்டு மாற்றப்படுவதைத் தொடர்ந்து தகவல் அவ்வப்போது வெளியிடப்படும் என்று அதன் செயல் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

மேலும், பொதுமக்கள் ஆயர் சிலாங்கூரை 15300 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது waterupdates.airselangor.com (முன்பு hentitugas.airselangor.com என அறியப்பட்டது) என்ற இணைப்பைப் நாடவும் என்று அபாஸ் அப்துல்லா விளக்கினார்.

“பணி அட்டவணயின் தகவல் எப்போதும் சரியான நேரத்தில் புதுப்பிக்கப்படுவதை உறுதிசெய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இதில் ஏற்கனவே செய்யப்பட்ட பணிகள், மதிப்பிடப்பட்ட மீட்பு நேரம் மற்றும் பிற தகவல்கள் அடங்கும்,” என்று அவர் கூறினார்.

சுங்கை லங்காட் நீர் சுத்திகரிப்பு ஆலையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அபாஸ், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் மீட்பு காலம் வளாகத்தின் தூரம் மற்றும் விநியோக அமைப்பைப் பொறுத்து மாறுபடும் என்றார்.

முன்னதாக, அக்டோபர் 10 ஆம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கி பெட்டாலிங், கோலாலம்பூர் மற்றும் உலு லங்காட் பகுதிகளில் திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடைகள் ஏற்படும் என்று ஆயர் சிலாங்கூர் அறிவித்தது.


அன்றைய தினம் இரவு 7 மணிக்குப் பணிகள் முடிவடைந்து, பயனாளிகளுக்கு படிப்படியாக நீர் விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 12ம் தேதி மதியம் 12 மணிக்கு நீர் விநியோகம் முழுமையாகச் சீரமைக்கப்படும்.


Pengarang :