NATIONAL

மலேசியாவுக்கு அரிசி ஏற்றுமதியைத் தொடர வியட்நாம் விருப்பம் தெரிவித்துள்ளது

கோலாலம்பூர், அக்.6- மலேசியாவுக்கு அரிசி ஏற்றுமதியைத் தொடர வியட்நாம் விருப்பம் தெரிவித்துள்ளதாக வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்தார்.

அவர்கள் மலேசியாவிற்கு அரிசியை தொடர்ந்து ஏற்றுமதி செய்ய தயாராக உள்ளனர். ஆனால், வியட்நாமில் இருந்து அரிசி இறக்குமதியை அதிகரிக்க வேண்டும் என்றால், மலேசியாவில் நியாயமான விலையை நிர்ணைக்க வேண்டும்.” என்று அவர் கூறினார்.

அக்டோபர் 2 முதல் அக்டோபர் 6 வரை நடைபெற்று வரும் 45வது ஆசியான் அமைச்சர்களின் விவசாயம் மற்றும் வனத்துறை (Amaf) கூட்டத்துடன் இணைந்து வியட்நாமின் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி துணை அமைச்சர் இங்குயேன் குக் திரி (Nguyen Quoc Tri) உடனான இருதரப்பு சந்திப்பு குறித்து முகமட் கருத்து தெரிவித்தார்.

ஆசியான் பிராந்தியத்தில் உணவுப் பாதுகாப்பைப் பேணுவதற்கு உறுப்பு நாடுகளுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பை வளர்க்கவும், ஆசியான் உலகின் உணவு  உற்பத்தி மையமாக வலுப் படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 45வது அமாஃப் மாநாட்டின் தொகுப்பாளராக மலேசியா உள்ளது.

மேலும், சிங்கப்பூரின் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ மற்றும் ஆசியான் பொதுச் செயலாளர் காவ் கிம் ஹார்ன் ஆகியோரும் 45வது அமாஃப்பில் கலந்து கொண்டனர்.

கிரேஸ் ஃபூ உடனான சந்திப்பில், மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே விவசாய வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்து இருவரும் விவாதித்ததாக அமைச்சர் கூறினார், அதே நேரத்தில் உணவுப் பாதுகாப்பின் சிக்கலை எதிர்கொள்வதில் சீனா மற்றும் இந்தியா போன்ற பிற நாடுகளுடன் ஆசியான் ஒத்துழைப்பை மேம்படுத்தப்பட வேண்டும் என்று காவோ தெரிவித்தார்.

– பெர்னாமா


Pengarang :