NATIONAL

அனாக் சிலாங்கூர் அனாக் சிஹாட் நிகழ்வில் இலவசமாகக் குழந்தைகளுக்கான சுகாதாரப் பரிசோதனை

ஷா ஆலம், அக் 13: நாளை மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனாக் சிலாங்கூர் அனாக் சிஹாட் நிகழ்வில் இலவசமாகக் குழந்தைகளுக்கான சுகாதாரப் பரிசோதனை உட்பட பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் காத்திருக்கின்றன.

மலேசியாவின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.

இந்நிகழ்வு தாமான் எங் ஆன் கிள்ளானின் உள்ள ஜாலான் பத்து திகா தேசியப் பள்ளியில் நடைபெற உள்ளதாக மாநிலப் பொது சுகாதார ஆலோசகர் தெரிவித்தார்.

இந்நிகழ்வு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சீரான மற்றும் சத்தான உணவை வழங்குவதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது டாக்டர் முகமட் ஃபர்ஹான் ருஸ்லியின் கூறினார்.

“இந்த திட்டத்தின் உள்ளடக்கங்களில் ஊட்டச்சத்து ஆலோசனை, ஆரோக்கியமான மனம், சுகாதார கண்காட்சி மற்றும் குழந்தைகளுக்கான சுகாதாரப் பரிசோதனை ஆகியவை இலவசமாக நடத்தப்படும்” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

மேலும், இந்நிகழ்வில் குழந்தைகளுக்கான கலாச்சார நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் மற்றும் வண்ணம் தீட்டும் போட்டிகள் ஆகியவையும் நடத்தப்படுகின்றன என்று அவர் கூறினார்.

கூடுதலாக, வருகையாளர்கள் அதிர்ஷ்டக் குலுக்குகில் பங்கேற்று வெற்றி பெறவும் வாய்ப்பு உள்ளது.

இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் பொது சுகாதார எஸ்கோ ஜமாலியா ஜமாலுடின் தொடக்கி வைப்பார்.


Pengarang :