NATIONAL

அரசாங்கம் 2025 இல் அனைத்துலக நிதி நிலையை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச வரியை அமுல்படுத்தும்

கோலாலம்பூர், அக் 13: தொழில்துறையினரின் கருத்துக்களையும் சமீபத்திய சர்வதேச  நிதி நிலை முன்னேற்றங்களையும்    கருத்தில் கொண்டு,  அரசாங்கம் 2025 ஆம் ஆண்டில் குறைந்தபட்ச வரி விதிப்பை அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

நிதி அமைச்சராகவும் இருக்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், குறைந்தபட்சம் 750 மில்லியன் யூரோ  அனைத்துலக ,  வருமானத்தைக் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த வரி பொருந்தும் என்றார்.

“மலேசியா சர்வதேச வரிவிதிப்பு தரங்களை கடைபிடிக்க வேண்டும், குறிப்பாக அதிகப்படியான வரி விதிப்பு நடவடிக்கைகள்   சர்வதேச நிறுவனங்களை, குறைந்த வரி விதிப்புகள் கொண்ட நாடுகளுக்கு முதலீட்டை மாற்றுவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று  டேவான் ராக்யாட்டில் சமர்ப்பிக்கும் போது,  “சர்வதேச அளவில் உலகளாவிய குறைந்த பட்ச வரியின் வளர்ச்சியை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கும்” என்று அவர் கூறினார்.


Pengarang :