SELANGOR

400 இந்திய குடும்பங்களுக்கு ஜோம் ஷோப்பிங் வவுச்சர் வழங்கப்படும் – பத்து தீகா தொகுதி

ஷா ஆலம், அக். 16: பத்து தீகா தொகுதியில் உள்ள மொத்தம் 400 இந்திய குடும்பங்களுக்கு அடுத்த மாதம் வரவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு ஜோம் ஷோப்பிங் வவுச்சர் வழங்கப்படும்.

நாளை முதல் செக்‌ஷன் 16ல் உள்ள அலுவலகத்தில் ரிங்கிட் 200 வவுச்சருக்காக விண்ணப்பிக்கலாம் என்று மக்கள் பிரதிநிதி டேனியல் அல்-ரஷித் ஹரோன் தெரிவித்தார்.

“விண்ணப்பதாரர்கள் அலுவலகத்திற்கு வந்து தேவையான ஆவணங்களை நிரப்பலாம். இந்த ஆண்டு 400 பெறுநர்களுக்கு ஒதுக்கீடு தயாராக உள்ளது. ஆனால் அதிகமானோர் விண்ணப்பித்தால், நாங்கள் மேல்முறையீடு செய்வோம்.

“ஜெயண்ட் கோத்தா கெமுனிங்கில் இந்த வவுச்சர்களைப் பயன்படுத்தலாம். இந்த திட்டம் தீபாவளி கொண்டாட்டத்தை மேலும் உற்சாகப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என அவர் எஹ்சான் விற்பனையில் சந்தித்தபோது கூறினார்.

ஜோம் ஷோப்பிங் ராயா என்பது மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். இது மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வைக் காக்கும் ஒரு நீண்ட கால திட்டமாகக் குறைந்த வருமானம் பெறும் குழுக்களைக் இலக்காகக் கொண்டது.


பொருளாதார நிலைமை மற்றும் மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு வவுச்சர் மதிப்பு RM100யிலிருந்து RM200 ஆக உயர்த்தப்பட்ட பின்னர் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 82,400 பெறுநர்கள் பயன்பெற RM16.48 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Pengarang :