NATIONAL

திவேட் கல்வி வாய்ப்பு கிடைக்காத  இந்திய மாணவர்களுக்கு உதவத் தயார்- அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

கோலாலம்பூர் அக் 16- திவேட் எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி துறையை வலுப்படுத்தும் நோக்கில், 2024-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் 680 கோடி ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

திவேட் பட்டதாரிகளுக்குச் சான்றிதழ் வழங்கும் திட்டத்திற்காக 10 கோடி வெள்ளி இந்த ஒதுக்கீட்டில் உட்படுத்தப் பட்டிருக்கிறது.

160 கோடி ரிங்கிட் நிதியைப் பயன்படுத்தி மனித வள மேம்பாட்டு வாரியம் (HRD Corp)17 லட்சம் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கும் என்றார் அவர்.

தொழில் திறன் கல்வியை பயில இந்திய மாணவர்களும் அதிக அளவில் முன் வர வேண்டும். தொழில் திறன் கல்வியை பயிலும் மாணவர்களுக்கு வருங்காலத்தில் சிறப்பான எதிர் காலம் காத்திருக்கிறது.

ஒருவேளை தொழில் திறன் கல்விக்கு மனு செய்து இடம் கிடைக்காத மாணவர்கள் நேரடியாக என்னை சந்திக்கலாம் என்று அமைச்சர் சிவகுமார் அறிவித்தார்.

புகைப்பட கலைஞர் பி. மலையாண்டி எழுதி வெளியிட்ட ஆதி குமணன் வரலாற்று நூலை நேற்று மனித வள அமைச்சர் சிவகுமார் வெளியீட்டு நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :