NATIONAL

ஹமாஸ் தலைவருடன் பிரதமர் சந்திப்பு- பாலஸ்தீனத்திற்குப் பிளவுபடாத ஆதரவை வழங்க உறுதி

கோலாலம்பூர், அக் 17- குண்டுவீச்சுத் தாக்குதல்களை நிறுத்துவதற்கான
அனைத்து முயற்சிகளையும் ராஃபாவில் மனிதாபிமான நடைத்தடத்தின்
உருவாக்கத்திற்கும் மலேசியாவின் பிளவுபடாத ஆதரவை பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று புலப்படுத்தினார்.

நீடித்து வரும் போருக்கு முடிவு கட்டும் வகையில் ஆக்கிரமிப்பு
அரசியலை நிறுத்தி ஹமாஸ் தரப்புடன் போர் நிறுத்தம் செய்து,
அமைதிக்கான முயற்சிகளை முன்னெடுப்பது இஸ்ரேல் மேற்கொள்ள
வேண்டிய முக்கிய நடவடிக்கைகளாகும் என்று பிரதமர் தனது பேஸ்புக்
பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியோவுடன் நேற்று
நான் தொலைபேசி வழி உரையாடினேன். பாலஸ்தீனத்திற்கு மலேசிய
மக்களின் பிளவுபடாத ஆதரவை அந்த உரையாடலின் போது நான்
எடுத்துரைத்தேன் என்றார் அவர்.

பெரும் இன்னல்களை அனுபவித்து வரும் பாலஸ்தீன மக்களுக்கு
உதவுவதற்காக மனிதாபிமான உதவிகளை குறிப்பாக உணவு மற்றும்
மருந்துகளை வழங்க மலேசியா கடப்பாடு கொண்டுள்ளதாகவும் அவர்
சொன்னார்.

பாலஸ்தீனத்திற்கு ஒரு கோடி வெள்ளி நிதியுதவி வழங்கப்படும் என்று
பிரதமர் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார். இந்த உதவித் தொகையை
10 கோடி வெள்ளியாக உயர்த்துவதற்கு ஏதுவாக அரசு சார்பு நிறுவனங்கள்,
தனியார் துறையினர் மற்றும் முதலீட்டு நிறுவனங்களும் பங்களிப்பை
வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :