NATIONAL

அந்நியத் தொழிலாளர் குடியிருப்பின் சிறப்பான மேம்பாட்டிற்குப் பி.கே.என்.எஸ். எஃப்.எம்.ஐ. உத்தரவாதம்

ஷா ஆலம், அக் 26- அந்நியத் தொழிலாளர்கள் குடியிருப்பை நிர்வகிக்கும்
மற்றும்ப பராமரிக்கும் பொறுப்பை பி.கே.என்.எஸ். எஃப்.எம். இண்டகிரேடட்
சென். பெர்ஹாட் நிறுவனம் சிறப்பாக நிர்வகிக்கும். இது தொழிலாளர்
பாதுகாப்புக்கும் மாநிலத்தின் ஆக்கத் திறனுக்கும் உத்தரவாதம் அளிக்கும்.

கடந்த 2020ஆம் ஆண்டில் ஏற்பட்ட கோவிட்-19 நோய்த் தொற்றை
எதிர்கொள்வதில் கிடைத்த அனுபவம் மூலம் அந்நியத் தொழிலாளர்
தற்காலிக குடியிருப்பு (டி.எல்.கியு.) மற்றும் அந்நியத் தொழிலாளர்
ஒருங்கிணைக்கப்பட்ட குடியிருப்புகளை (சி.எல்.கியு.) நிர்வகிக்கும்
பொறுப்பை தாங்கள் ஏற்றுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமைச்
செயல்முறை அதிகாரி சம்சுல் பஹாரி அகமது கூறினார்.

இவ்வாண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பி.கே.என்.எஸ்.
எஃப்.எம்.ஐ. நிறுவனம் கோல சிலாங்கூர் மாவட்டத்தின் கோத்தா புத்ரியில்
உள்ள பசுமை தொழிலியல் பூங்காவின் (கிரிப்) நிர்வாகப் பொறுப்பையும்
ஏற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்நியத் தொழிலாளர்களின் வசதி மற்றும் நலனை காப்பதற்கு டி.எல்.கியு.,
சி.எல்.கியு மற்றும் கிரிப் பகுதிகளில் திட்டமிடல், பராமரிப்பு, மேம்பாடு
மற்றும் அடிப்படை வசதிகள் நிர்வகிப்பு ஆகியப் பணிகளை தாங்கள்
மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

அதிநவீன தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திட்டத்தின்
வாயிலாக சிலாங்கூரிலுள்ள அந்நியத் தொழிலாளர்களுக்குச் சிறப்பான
சேவையை வழங்க முடியும் என நாங்கள் நம்புகிறோம் என அவர்
கூறினார்.

அந்நிய நாட்டினருக்கான குடியிருப்புகளைப் பராமரிப்பது தவிர்த்து
பி.கே.என்.எஸ். வாரியத்திற்குச் சொந்தமான பேரங்காடிகள், அலுவலகங்கள் மற்றும் சேவை அடுக்குமாடி குடியிருப்புகளைப் பராமரிக்கும் பொறுப்பையும் தாங்கள் ஏற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :