NATIONAL

 பேராக்கில் 329 பேர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர்

ஈப்போ, நவ 1: நேற்று காலை 8 மணி நிலவரப்படி பேராக் மாநிலத்தில் 94 குடும்பங்களைச் சேர்ந்த 329 பேர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் இன்னும் கிரியன் மற்றும் ஹிலிர் பேராக் மாவட்டங்களில் உள்ள மூன்று தற்காலிகத் தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பேராக் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு (ஜேபிபிஎன்) அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

22 குடும்பங்களைச் சேர்ந்த 90 பேர் தேசியப் பள்ளி (எஸ்கே) சங்காட் லோபாக் பிபிஎஸ் மற்றும் 18 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் பிபிஎஸ் தேசியப் பள்ளி அலோர் பொங்சுவில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதே நேரத்தில் ஹிலிர் பேராக்கில் உள்ள டேவான் பல்நோக்கு திடல் தெம்பாக் பிபிஎஸ்யில் 84 குடும்பங்களைச் சேர்ந்த 183 பேர் தங்கியுள்ளனர் என கிரியான் பொறுப்புக் குழு தெரிவித்தது.

இதற்கிடையில், சாங்கட் ஜொங்கில் உள்ள பிடோர் ஆற்றின் நீர்மட்டம் குறைந்துள்ளது, இருப்பினும், அது இன்னும் ஆபத்தான நிலையில் தான் (4.09 மீட்டர்) உள்ளது என நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (ஜேபிஎஸ்) தெரிவித்துள்ளது.

– பெர்னாமா


Pengarang :