SELANGOR

சிலாங்கூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 587ஆக உயர்வு- ஏழு நிவாரண மையங்கள் திறப்பு

ஷா ஆலம், நவ 6 – சிலாங்கூர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏழு
தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ள வெள்ள அகதிகளின்
எண்ணிக்கை இன்று காலை 8.00 மணியளவில் 156 குடும்பங்களைச்
சேர்ந்த 587 பேராக அதிகரித்துள்ளது.

இந்த மையங்களில் நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில் 157
குடும்பங்களைச் சேர்ந்த 579 பேராக இருந்ததாக மாநிலப் பேரிடர்
மேலாண்மை பிரிவின் ஸ்மார்ட் சிலாங்கூர் நடவடிக்கை அறை கூறியது.

கம்போங் டத்தோ அகமது ரசாலி மண்டபத்தில் இந்த எண்ணிக்கை உயர்
பதிவு செய்யப்பட்டதாகக் கூறிய அந்த அமைப்பு, அடுத்தக் கட்ட
நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக தாங்கள் நிலைமையை அணுக்கமாகக்
கண்காணித்து வருவதாக தெரிவித்தது.

உலு லங்காட், சிப்பாங் மற்றும் பெட்டாலிங் மாவட்டங்களில் நேற்று
பெய்த அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில்
பாதிக்கப்பட்டவர்களைத் தங்க வைப்பதற்காக ஏழு துயர் துடைப்பு
மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

பாங்கி தேசிய பள்ளி, தாமான் கெமிலாங் சமூக மண்டபம், சிப்பாங்
கம்போங் டத்தோ அகமது ரசாலி மண்டபம் ஆகிய இடங்களில் துயர்
துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.


Pengarang :