ANTARABANGSA

ஜோர்டானிய இராணுவம் அதிரடி- வான்குடை வழி காஸாவுக்கு மருத்துவப் பொருள்கள் விநியோகம்

அம்மான், நவ 6 – காஸா தீபகற்பத்திலுள்ள ஜோர்டானிய கள
மருத்துவமனைக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிப் பொருள்களை
வான் மார்க்கமாக சேர்க்கும் அதிரடி நடவடிக்கையை ஜோர்டானிய
ஆகாயப்படை மேற்கொண்டது.

காஸாவிலுள்ள ஜோர்டானிய கள மருத்துவமனைக்கு வான்குடை வழி
மருத்துவப் பொருள்களை அனுப்பும் துணிகர நடவடிக்கையில் ஆகாயப்
படை வீரர்கள் ஈடுபட்டதாக ஜோர்டானிய மன்னர் ராஜா அப்துல்லா 11
கூறினார்.

காஸாவில் காயமடைந்தவர்களுக்கு உதவுவது நமது கடமையாகும்.
பாலஸ்தீன சகோதரர்களுக்கு நாம் என்றும் துணை நிற்போம் என்று அவர்
தெரிவித்தார்.

இஸ்ரேலிய படைகளின் தாக்குதல்களாகக் காஸாவில் உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை 9,770 பேராக அதிகரித்துள்ளதாகப் பாலஸ்தீன சுகாதார
அமைச்சு கடந்த ஞாயிற்றுக் கிழமை கூறியது.


Pengarang :