NATIONAL

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் வீடுகளைச் சுத்தம் செய்ய 55 தன்னார்வலர்கள் ஒன்றிணைப்பு – சிலாங்கூர் குழு

ஷா ஆலம், நவ 10: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இரு பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்களின் வீடுகளைச் சுத்தம் செய்ய சிலாங்கூர் குழு மொத்தம் 55 தன்னார்வலர்களை ஒன்றிணைத்தது.

புதன்கிழமை செயல்படுத்தப்பட்ட தன்னார்வலர்கள் பாங்கி லாமா மற்றும் டெங்கில் குடியிருப்பாளர்களின் வீடுகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர் என திட்ட அலுவலர் அமின் ஹஃபிட்ஸி கூறினார்.

“கம்போங் பாங்கி லாமா மற்றும் டெங்கிலில் உள்ள ஆறு வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் 35 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

“புதன்கிழமை கம்போங் பாங்கி லாமாவில் உள்ள நான்கு வீடுகளை மையமாகக் கொண்ட துப்புரவு நடவடிக்கைக்கு மொத்தம் 20 தன்னார்வலர்கள் வந்ததாகப் பதிவு செய்யப்பட்டது,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

துப்புரவுப் பணிகளுக்கு மேலதிகமாக, 60 குடும்பங்களை உள்ளடக்கிய நான்கு தற்காலிக தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) தஞ்சம் அடைந்துள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு இதர உதவிகளும் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கம்போங் டத்தோ அஹ்மட் ரசாலி பிபிஎஸ், டெங்கில் தேசிய இடைநிலைப்பள்ளி (எஸ்எம்கே), ஜெண்டராம் ஹிலிர் மக்கள் மண்டபம் மற்றும் பாங்கி லாமா மண்டபம் ஆகியவற்றிற்கு உணவுக் கூடைகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு டயப்பர்கள் விநியோகிக்கப்பட்டன.

“இந்த விநியோகம் பிபிஎஸ் மேலாளர், கிராமச் சமூக மேலாண்மை கவுன்சில் மற்றும் கிராம தலைவர் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது. இந்த உதவி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சுமையை குறைக்கும் என்று நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :