SELANGOR

தாமான் டெம்ப்ளர் தொகுதியில் கும்பூல் (வேன்-அழைப்பு) சேவை ஏற்பாடு செய்யும் 

ஷா ஆலம், நவ 10: தாமான் டெம்ப்ளர் தொகுதி பொதுப் போக்குவரத்து இல்லாதப் பகுதிகளில் வசிப்பவர்களின் நடமாட்டத்தை எளிதாக்க வேன்-அழைப்பு சேவையை ஏற்பாடு செய்யவுள்ளது.

கும்பூல் செயலி பயன்படுத்தும் இச்சேவையானது பயணங்களைத் திட்டமிடுவதை எளிதாக்கும் என்று சட்டமன்ற உறுப்பினர் அன்ஃபால் சாரி கூறினார்.

“தற்போது, பேருந்து சேவை உள்ளது, ஆனால் அது அனைத்து வழித்தடங்களிலும் செல்லவில்லை. இது வேலைக்குச் செல்லும் குடியிருப்பாளர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்துகிறது, ஏனெனில் அவர்கள் கிராப் சேவை அல்லது குடும்ப உதவியைப் பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது.

“நாங்கள் தற்போது வேன்-அழைப்பு பயன்படுத்திய சில தொகுதிகளைப் பார்த்து அதன் செயல்படுத்தலை ஆராயும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை எளிதான, வசதியான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து அணுகலுக்காகவும் (RM1) போக்குவரத்து நெரிசல் மற்றும் பார்க்கிங் ஆகியவற்றைக் குறைக்கவும் கும்பூல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

கும்பூல் சேவையைப் பயன்படுத்தும் தொகுதிகளில் சுபாங் ஜெயா, கம்போங் துங்கு மற்றும் புக்கிட் காசிங் ஆகியவையும் அடங்கும்.

இந்த செயலியை ஆப்பிள் ஸ்டோர் அல்லது கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். பேருந்து மற்றும் எல்ஆர்டி நிலையங்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட நிறுத்தங்களை இந்த சேவை உள்ளடக்கியது குறிப்பிடத்தக்கது.


Pengarang :