Budget

சிலாங்கூர்  மாநிலம் இவ்வாண்டு 4.4 விழுக்காட்டு பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்யும் 

ஷா ஆலம், நவ 10 – சிலாங்கூர் மாநிலம் இவ்வாண்டு 4.4 விழுக்காட்டு பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகப் பொருளாதார மந்த நிலையில் பாதிக்கப் பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்திற்கேற்ப இந்த வளர்ச்சி அமைவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த வளர்ச்சி சூழல் மாநிலத்தின் உற்பத்தித் துறைக்கு விளைவுகளை ஏற்படுத்தும் என்று மாநில சட்டமன்றத்தில் இன்று 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் சொன்னார்.

மாநிலத்தின் உற்பத்தித் துறை இவ்வாண்டு மந்தமாக அதாவது 1.4 விழுக்காடு என்ற அளவில் வளர்ச்சியைப் பதிவு செய்யும். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சேவைத் துறை கணிசமான பங்கினை ஆற்றும். அத்துறையின் வளர்ச்சி 5.8 விழுக்காடாக இருக்கும் வேளையில் உள்ளூர் மக்களின் செலவிடும போக்கு அதற்கு உத்வேகத்தை அளிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :